காற்றில் தவழும் கண்ணதாசன்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

காற்றில் தவழும் கண்ணதாசன்

Weight
290.00 Gms
காலங்களைக் கடந்த கீதங்களாக இன்றைக்கும் வாழ்பவர் கண்ணதாசன். இயல்பான, வாழ்வியல் செறிவுமிக்க வரிகளைப் பாடல்களாக்கி, சமூகத்தின் கடைக்கோடி காதுகள் வரை ரீங்கரித்தவர் அவர். ‘காதல் என்றால் கண்ணதாசன்தான்’ என்கிற அளவுக்கு ரசனையிலும், அதீத அன்பிலும் பொங்கிப் பிறந்தவை அவருடைய பாடல்கள். காதலை மட்டும் அல்லாது, கற்க வேண்டிய நெறிகளையும், வாழ்வியல் அனுபவக் கூறுகளையும் அவர் வார்த்தைகளில் வழியவிட்ட விதம் அசாத்தியமானது.

சொர்க்கத்தை சுட்டிக்காட்டிய கண்ணதாசன், சோகத்தின் படு பாதாளத்தையும் தன் பாடல்களில் இறக்கி வைத்தார். அத்தனை மனிதர்களும் தங்கள் வாழ்வோடு பொருத்திப் பார்க்கிற வரிகளாக - அனுபவ வலிகளாக அவருடைய வரிகள் இருந்தன.

வாழ்வியல், காதல், இலக்கியம் என மூன்று பகுதிகளாகப் பிரித்து கண்ணதாசனின் நிகழ்வுகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டு உள்ளன. ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை...’ என காலக்கணிதமாக கண்ணதாசன் எழுதிய வரிகளை நிஜமாக்கி இருக்கிறது இந்த நூல்!
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.