சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

Author
Weight
490.00 Gms
“தினத்தந்தி”யில் வரலாற்றுச் சுவடுகள் நெடுந்தொடர் வெளியானபோது, தமிழ் சினிமா பற்றிய பகுதியில் “சூப்பர் ஸ்டார்” ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு இடம் பெற்றது. ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாசித்து மகிழ்ந்தனர்.

தமிழ்த்திரை வானில் ரஜினிகாந்த் ஒரு விடிவெள்ளி என்றால் அது மிகை அல்ல. பஸ் கண்டக்டராக வேலைபார்த்தவர், திறமையாலும், விடா முயற்சியாலும், கடும் உழைப்பாலும் திரை உலகில் அடியெடுத்து வைத்து, படிப்படியாக உயர்ந்து, யாரும் எட்டமுடியாத சிகரத்தின் உச்சியை அடைந்திருக்கிறார். அவருடைய படங்கள் சர்வதேசப் படங்களுக்கு இணையாக விளங்குவதுடன், வசூலிலும் சாதனை நிகழ்த்தி வருகின்றன.

இத்தொடர் “தினத்தந்தி”யில் வெளியானபோது, ரஜினி ரசிகர்கள் மட்டும் அல்ல, ரஜினிகாந்தும் பாராட்டு தெரிவித்தார்.“என்னுடைய முழு வாழ்க்கையையும் சரியானபடி பிரதிபலிக்கும் விதத்தில் அமைந்துள்ளது” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்த வண்ணம்  இருந்தனர்.அவர்களின் விருப்பத்தை ஏற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாற்றை தந்தி பதிப்பகத்தின் சார்பில் புத்தகமாக வெளியிடுகிறோம்.அபூர்வமான படங்களுடன் ஏறத்தாழ 4௦௦ பக்கங்கள் முழுவதும் வண்ணத்தில் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் புத்தகம் அமைந்துள்ளது .ரஜினி பற்றி இப்படி ஒரு புத்தகம் இதுவரை வெளிவந்தது இல்லை.

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.