Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

வாக்குமூலம்

Author
பைம்பொழில் மீரான்
மற்றவர்களின் வரலாற்றை விட திரைப்படக் கலைஞர்களின் வரலாறு திரைப்படம் போன்றே சுவாரஸ்யங்களும், திருப்பங்களும் நிறைந்தது. இந்த நூலில் நண்பர் பைம்பொழில் மீரான் 40 திரைப்படக்கலைஞர்களின் வாழ்க்கையைப்பதிவு செய்திருப்பதன் மூலம் திரைப்படத்துறைக்குத் தன்னால் இயன்ற பங்களிப்பை செய்திருக்கிறார். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் வரலாறு தான். அதை மற்றவர்கள் எழுதும் வகையில் வாழும் வாழ்க்கை தான் சிறப்பானது. அந்த சிறப்பு மிக்க வாழ்க்கையை வாழ்ந்த 40 கலைஞர்களின் வாழ்க்கைக்கு நெருக்கமாக நின்று அதனைச் சுருக்கமாக தந்திருக்கிறது இந்த நூல். சம்பந்தப் பட்டவர்களின் அருகில் அமர்ந்து அவர்கள் வாயாலேயே அவர்கள் வரலாற்றைக் கூறச் செய்து பதிவுசெய்யும் அற்புதம்
அரிதாக நிகழும் ஒன்று. அப்படித்தான் இதுவும் நிகழ்ந்திருக்கிறது. இது கிட்டத்தட்ட சுயசரிதைக்கு மிக அருகிலான ஒன்று.

இது ஒவ்வொரு சினிமா கலைஞனும் படிக்க வேண்டிய நூல். தன் முன்னோர்களை அறிந்திருப்பது வளரும் திரைப்படக் கலைஞனுக்கு வலுசேர்க்கும். இது தனிப்பட்ட 40 கலைஞர்களின் வாழ்க்கை அல்ல. திரைப்படத்தைக் கற்க விரும்பும் மாணவனுக்கு 40 தலைப்பிலான பாடம்.

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.