ஜோசப் வி.மாசெல்லி எழுதிய "The Five C's of Cinematography: Motion Picture Filming Techniques Simplified" புத்தகத்தில், ஒளிப்பதிவு சார்ந்து மையமாகச் சொல்லியிருக்கிற தகவல்களின் சாராம்சங்கள் இந்நூலில் தொகுக்கப்பெற்றிருக்கின்றன. வாசகர்கள் அனைவருக்கும் புரியவேண்டும் எனும் நோக்கில். இந்நூல் எளிமையான மொழியாக்கத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு கதையை எளிமையானதொரு திரைமொழியோடு காட்சிப்படுத்த, இப்புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிற ஒளிப்பதிவு :சார்ந்த அறிமுகங்கள் நிச்சயம் உங்களுக்கு உதவிசெய்யும்.
1965ஆம் ஆண்டு முதல் பதிப்பைக் கண்ட 5e's of cinematography புத்தகம், வெளியாகி அரை நூற்றாண்டுகளைக் கடந்துவிட்டது. ஆனாலும், இன்றளவும் இப்புத்தகம் திரைத்துறை சார்ந்த ஆர்வலர்களாலும், ஒளிப்பதிவைக் கற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் மத்தியிலும் ஒரு "பைபிள்" போலக் கொண்டாடப்படுகிறது. ஏனெனில், இந்நூல் அவ்வளவு எளிமையாக, ஒளிப்பதிவின் அரிச்சுவடிகளைக் கற்றுத்தருகிறது. அதுவே, இதன் சிறப்பு.
கதைக்குத் தேவையான ஒரு உணர்வை. காட்சி வழி எளிமையோடு திரையில் தோற்றுவிக்க முயன்றால் அதுவே சிறந்த ஃப்லிம்மேக்கி அதையே இக்குறுநாலும் வலியுறுத்துகிறது.
No product review yet. Be the first to review this product.