"மாணிக்கம்', 'அளம்' எனும் இரு நாவல்களின் மூலம் தமிழ் புனைகதை வெளியின் கவனத்தை ஈர்த்தவர் சு. தமிழ்ச்செல்வி. 2002ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான தமிழக அரசு விருது இவரது முதல் படைப்பான "மாணிக்கம்" நாவலுக்குக் கிடைத்தது.
தீவிர இயங்கு தன்மையும் படைப்பூக்கமும் இயல்பாக்க் கொண்ட சு.தமிழ்ச்செல்வியின் மூன்றாவது நாவல் 'கீதாரி'. வாழ்தலின் நிமித்தம் புலம்பெயரும் அனுபவத்தின் வலியை 'பெற்றோகாட்'டின் 'விஷக் கன்னீர்க்குப் பிறகு அழுத்தத்தோடு விவரித்துச் சொல்கிறது இந்நாவல்.
மனிதகுலத்தின் நெடிய வரலாறெங்கும் காணக்கிடைக்கும் தீராத அலைச்சலும் மனக்கொதிப்பும் வாழ்தலுக்கான வேட்கையும் இயற்கை தன்னுள் வைத்திருக்கும் உயிர்களுக்கான ஆறுதலும் இப்புனைவின் பரப்பெங்கும் உக்கிரம் கொண்டுள்ளன.
No product review yet. Be the first to review this product.