அண்ணல் அடிச்சுவட்டில்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

அண்ணல் அடிச்சுவட்டில்

Weight
320.00 Gms
{ மகாத்மா காந்தி ஆவணப்படம் உருவான கதை }

 1937 அக்டோபர் 2, நியூயார்க்கிலிருந்து டப்ளின் செல்லும் கப்பலின் ஒரு தமிழ் இளைஞன் கனவொன்று கண்டார் - மகாத்மா காந்தியின் வாழ்க்கையை ‘டாகுமெண்டரி’ படமாக எடுக்க வேண்டுமென்று. இரண்டரை ஆண்டுகள். இருமுறை உலகை வலம் வந்தார். ஒரு லட்சம் மைல் பயணம். முப்பது ஆண்டுகளில், நூறு காமிராகாரர்கள் படம்பிடித்த 50,000 அடி நீளப் படச் சுருள்களைத் திரட்டினார்.1940 இல் படம் வெளிவந்தது. பிறகு தெகுங்கு, இந்தி விளக்கவுரையுடன் அதை வெளியிட்டார். 1953இல் ஹாலிவுடில் அதன் ஆங்கில வடிவத்தைத் தயாரித்தார்.

அவர்தான் “ஏ.கே.செட்டியார்” தமிழில் பயண இலக்கியத்தின் முன்னோடி.  ‘குமரிமலர்’ ஆசிரியர். தமிழ்ச் சமூக வரலாற்றை ஆவணப்படுத்தியவர். காந்தி பட உருவாக்கத்தை பற்றி ஏ.கே.செட்டியார் எளிய நடையில், சுவையாகவும் சிறுசிறு நிகழ்ச்சிக் குறிப்புகளாகவும் எழுதிய பதிவு இந்நூல்.

அரிய பல பிற்சேர்க்கைகளோடு இந்நூலைப் பதிப்பித்துள்ள ஆ.இரா. வேங்கடாசலபதி, ஏ.கே.செட்டியாரின் வாழ்வையும் பணியையும் அறிமுகப்படுத்தும் ஒரு விரிவான முன்னுரையினை வழங்கியுள்ளார். விரிவாக்கப்பட்ட பதிப்பில் மேலும் பல புதிய செய்திகள் அடங்கியுள்ளன.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.