மருந்து கொடுத்துத் துன்பத்தைக் குறைப்பதே மருத்துவத்தின் நோக்கமெனில், துன்பத்தை எதற்காகக் குறைக்க வேண்டும் என்ற கேள்வி தவிர்க்க முடியாதவாறு எழுகிறது. முதலாவதாக, மனித குலம் தூய்மை பெறுவதற்குத் துன்பம் துணை புரிவதாய் அல்லவா கருதப்படுகிறது. இரண்டாவதாக, மாத்திரைகளையும் தூள்களையும் கொண்டு துன்பத்தைக் குறைத்துக் கொள்ள மனித குலம் தெரிந்து கொண்டு விடுமாயின், மக்கள் மதத்தையும் தத்துவ ஞானத்தையும் விட்டொழித்து விடுவார்களே, இதுகாறும் மக்கள் எவற்றில் தமக்கு எல்லாக் கேடுகளிடமிருந்தும் பாதுகாப்பு தேடிக்கொண்டார்களோ, எவற்றில் பேரின்பம் கிட்டுவதற்கான மார்க்கம் அமைந்திருக்கக் கண்டார்களோ அந்த மதத்தையும் தத்துவ ஞானத்தையும் விட்டுத் துறந்து விடுவார்களே(பின்னட்டைலிருந்து )
No product review yet. Be the first to review this product.