மனித உறவின் சிக்கலை முன்னிலைப்படுத்தி யதார்த்த பாணியில் படமெடுத்த ஆர்ட் சினிமாவிற்கும் மைய நீரோட்ட சினிமாவிற்கும் நடுவில் ஒரு மிடில்ட்-ஆப்-த-ரோட் சினிமாவில் நம்பிக்கை கொண்ட இம்மூன்று இயக்குனர்களின் முக்கியமான படங்களும் பாலியல் சார்ந்த சிக்கல்கள் மூலமாக நமது சமூகத்தை அலசுகின்றன. அத்தகைய சிக்கலான உறவுகளை கவிநயத்துடன் தனது இயல்பான கேமராக் கண்களுடன் பார்ப்பதில் பாலு மகேந்திரா அவர்கள் நிகரற்று விளங்குகிறார். அவர் உலகலாவிய பல மேதைகளைப் போல தனது வாழ்விலிருந்தே தனது கவனிக்கதக்க படங்களுக்கான உந்துதலைப் பெற்றார். அவரது சீடர்கள் வரிசையில் இன்று பாலா, ராம், வெற்றிமாறன் மற்றும் சீனு ராமசாமி போன்றோர் பயணித்து வருவது மகிழ்ச்சி.
No product review yet. Be the first to review this product.