ஆம்ஸ்ட்ராங்க் பிரவின் திருநெல்வேலியில் பிறந்தவர். அமலாபால் நடிப்பில் 'கடாவர்' படத்தில் இணை இயக்குனராகவும், உறுமீன், உரு போன்ற படங்களில் முதன்மை இணை இயக்குனராகவும், குலேபகாவலி இயக்குனர் கல்யாணிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றியவர். சத்தியம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி இயக்குனராகவும், சினிமா ரிப்போர்ட்டராகவும் பணியாற்றிவிட்டு, புதிய தரிசனம், சிறகுகள் போன்ற பத்திரிக்கைகளில் இணை ஆசிரியராகப் பணியாற்றினார். தற்போது 'உயில் ஒன்று' என்ற படத்தை AARMZII FILMS என்ற படத் தயாரிப்புக் கம்பெனி மூலம் சொந்தமாக தயாரித்து வருகிறார். பல தயாரிப்பு நிறுவனங்களில் Production Executive ஆகவும், திரைக்கதை ஆசிரியராகவும் இயங்கிவருகிறார். தமிழ் ஸ்டுடியோ 'படிமை'-யின் மாணவன், தியேட்டர்லேப்பில் முறையாக நடிப்புப் பயிற்சி முடித்து காத்தாடி, பட்டிபுலம் போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். NFDC-யில் படத்தொகுப்பு (FILM EDITING) பயின்றவர். லயோலா கல்லூரியில் கணிதம் பட்டப்படிப்பு முடித்தவர்.
------------------------------------------------------------
இவ்வளவு அழகாக தமிழ் சினிமாவை புரிந்துகொள்வது மிக ஆச்சரியமாக உள்ளது. இச்சிறுவயதில் மொத்த சினிமாவின் எல்லைகளை வரையறுத்து, அதில் முழ்கி முத்தெடுக்கும் வித்தையை விரல்களால் வடித்து, இப்புத்தகத்தில் விருந்தாக்கியிருக்கிறார். ’இன்று மட்டுமல்ல; என்றுமே தமிழ்சினிமாவில் ஒரு நல்ல திரைப்படம் எடுத்தற்குறிய மிகச்சிறந்த வழிகாட்டி இப்புத்தகம்’.
-திருப்பூர் சுப்பிரமணியன்
தமிழ் திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர்.
----------------------------------------------
இந்த புத்தகம் தயாரிப்பாளர்களுக்கு வெறும் திரைப்படம் தயாரிப்பதை பற்றி சொல்லி கொடுப்பது மட்டுமல்ல. சிறப்பான, தரமான ஒரு படைப்பை, படைப்பாளிகளிடமிருந்து பெற அவர்களுடன் சேர்ந்து உழைக்கும் ஒரு முதன்மை உழைப்பாளியை உருவாக்குவதற்கான முதல் படி.
-கோ. தனஞ்ஜெயன்
பாஃப்டா (BOFTA) திரைப்படக் கல்லூரி நிறுவனர் - தயாரிப்பாளர்
----------------------------------------------------------
சினிமாவில் இயங்கும் சினிமாக்காரர்கள் அனைவருக்கும் சிறந்த வழிகாட்டி இந்த புத்தகம். மிகச் சிறந்த ‘சினிமா கையேடு’
-ஜாகுவார் தங்கம்
தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத் தலைவர்.
---------------------------------------------------------
புதிதாக வரும் தயாரிப்பாளர்கள் கூட புரிந்து கொள்ளும்படி, எல்லாவற்றையும் மிக எளிமையாக விளக்கி சொல்லியிருக்கிறார்.
-ஸ்ரீகணேஷ்.
இயக்குனர்
(8 தோட்டாக்கள்,
குருதி ஆட்டம்)