சஸ்பென்ஸ் & திரில்லர் படங்களுக்கான திரைக்கதை எழுதும் உத்தி - இயக்குநர் நித்திலன் சாமிநாதனின் ஒருநாள் பயிற்சிப்பட்டறை
How to write screenplay for Suspense & Thriller - One Day workshop by Maharaja Director Nithilan Saminadhan
25-08-2024, Sunday Morning 10 am, Chennai.
பயிற்சியாளர்: இயக்குநர் நித்திலன் சாமிநாதன்
பயிற்சிக்கட்டணம் உண்டு.
நண்பர்களே, சமீபத்தில் விஜய் சேதுபதி அவரக்ளின் நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தின் திரைக்கதை உத்தி அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டு பெரும் வெற்றியை பெற்று தந்தது. சஸ்பென்ஸ் & திரில்லர் படத்திற்கான திரைக்கதையை எப்படி எழுதுவது, நான் - லீனியர் (Non-Linear) திரைக்கதை எழுதுவது எப்படி, எழுதும்போது கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்னென்ன என்பவற்றை இயக்குநர் நித்திலன் அவர்களே நேரடியாக ஒருநாள் பயிற்சியாக வழங்கவிருக்கிறார். தமிழ் சினிமாவில் திரைக்கதை உத்தியில் புதிய பாய்ச்சலை உருவாக்கி, பல நாட்களாக சோர்ந்து போயிருந்த தமிழ் சினிமாவிற்கு மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்து, புதிய பாதையை அமைத்துக்கொடுத்த இயக்குநர் நித்திலன் அவர்களின் இந்த ஒருநாள் பயிற்சியில் பங்கேற்று பயனடையுங்கள். வாய்ப்பை தவறவிடாதீர்கள்.