திரைக்கதை புத்தாண்டு - மூன்று நாள் தொடர் பயிற்சிப்பட்டறை
29, 30, 31 - ஞாயிறு, திங்கள், செவ்வாய், ஞாயிறு காலை 10 மணிமுதல், செவ்வாய்க்கிழமை இரவு 12 மணிவரை
பியூர் சினிமா, அன்பு நகர், வளசரவாக்கம்.
தொடர்புக்கு: 9840644916
நுழைவுக்கட்டணம் உண்டு.
29-12-2024, ஞாயிறு காலை 10 மணிக்கு : திரைக்கதை எழுதும் உத்தி, கதாபாத்திர வடிவமைப்பு, திரைக்கதை தணிக்கை
பேராசிரியர் மற்றும் திரைக்கதை ஆலோசகர் சாய் விஜேந்திரன் அவர்கள், திரைக்கதை எழுதுவதில் கடைபிடிக்க வேண்டிய உத்திகள், திரைக்கதையை எப்படி தணிக்கை செய்வது, கதாப்பாத்திரங்களை எப்படி வடிவமைப்பது என்பது போன்ற திரைக்கதை உத்திகள் குறித்து வகுப்பெடுக்க இருக்கிறார்.
30-12-2024, திங்கள் காலை 10 மணிக்கு: சுயாதீன திரைப்படங்களுக்கான திரைக்கதை & உருவாக்கம்
இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் அவர்கள் தன்னுடைய வெங்காயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனிமுத்திரை பதித்தவர். இவருடைய புதிய முயற்சியாக, ஒன் என்கிற திரைப்படம், தனியொரு மனிதனாக திரைக்கதை எழுதி, ஒளிப்பதிவு செய்து, நடித்து, எடிட் செய்திருக்கிறார். தமிழ் சூழலில் குறைந்த பட்ஜெட்டில் எப்படிஇ படங்களை எடுப்பது, அவற்றை எப்படி மார்க்கெட்டிங் செய்வது, எப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது என்பது குறித்து வகுப்பெடுக்க இருக்கிறார்.
31-12-2024, செவ்வாய் காலை 10 மணிக்கு: திரைக்கதை & பீட் சீட் - பிளாட் பாயிண்ட் & கான்பிலிக்ட் உருவாக்கம்
அருண் மோ அவர்களின் இந்த வகுப்பில், பிட்ச் டாக் தயார் செய்வது, திரைக்கதையில் பீட் சீட் தயார் செய்வது, ப்ளட் பாயிண்ட் உருவாக்கம், மற்றும் கான்பிலிக்ட் கொண்டு ஒரு கதையை எப்படி உருவாக்குவது என்பது போன்ற வகுப்பு நடைபெறும். இந்த வகுப்பு செவ்வாய்க்கிழமை இரவு 12 மணிவரை நடக்கும். புத்தாண்டு கொண்டாட்டத்தோடு வகுப்பு நிறைவடையும்.
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை புதுமையான முறையில் சினிமாவோடு தொடர்பு படுத்தி கொண்டாடி வரும் தமிழ் ஸ்டுடியோ, 2025 ஆம் ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டத்தை திரைக்கதை புத்தாண்டாக கொண்டாக இருக்கின்றது. 2025 ஆம் ஆண்டு திரைக்கதை குறித்து எல்லாருக்கும் எளிமையான புத்தகங்கள், நிறைய இலவச மற்றும் கட்டண வகுப்புகள் நடத்தி திரைக்கதையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஆண்டாக கடைபிடிக்க இருக்கிறது.
இந்த மூன்று நாள் பயற்சிப்பட்டறைக்கு தங்குமிடம், மதிய உணவு, என எல்லாவற்றுக்கும் சேர்த்து குறைந்தபட்ச கட்டணம் இருக்கிறது.
முன்பதிவு செய்ய: 9840644916