PURE: பியூர் சினிமா உறுப்பினர் சேர்க்கை இரண்டு திட்டங்கள்....
பியூர் சினிமாவில் இரண்டு வகையான உறுப்பினர் திட்டம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. சினிமாவை கற்க, நேசிக்க, சினிமாவோடு வாழ, சினிமா சார்ந்த சமூக ஒழுங்கு, வாழ்வியல் ஒழுங்கு, பண்பாட்டு ஒழுங்கு போன்றவற்றை கற்கவும், சினிமாவை ஒரு சமூகமாக சமூக பண்பாட்டு அங்கமாக கொண்டாட பியூர் சினிமாவோடு உறுப்பினர்களாக இணைந்திருங்கள்.
பியூர் சினிமா உறுப்பினர் திட்டம் 1 - சினிமா கற்றல் (PCM - E))
பியூர் சினிமாவில் தற்போது உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. சினிமாவை கற்றுக்கொள்ளும் நோக்கில் முழு நேரமாக அல்லது நிறைய முன்னெடுப்புகளில் பங்குக்கொள்ள இயன்றவர்கள் இந்த சினிமா கற்றல் குழுவில் இணையலாம். சில நிகழ்வுகளில் கலந்துக்கொள்வது கட்டாயம். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆக்டிவாக இல்லை எனில் observers குழுவிற்கு மாற்றப்படுவார்கள். அல்லது நீக்கப்படுவார்கள்.
உறுப்பினர்களுக்கான பயன்கள்:
மாதம் ஒருமுறை உறுப்பினர்கள் நிறுவனர் அருண் மோ அவர்களுடன் திரையரங்கம் சென்று புதுப்படம் ஒன்றை பார்த்து அதுபற்றி பியூர் சினிமாவில் விவாதித்தல் (வார நாட்களில் மட்டுமே திரையரங்கம் செல்வோம்)
மாதம் ஒருமுறை உறுப்பினர்கள் நிறுவனர் அருண் மோ அவர்களுடன் இனைந்து சினிமா ரசனை பயணம் செல்வது - ஒரு நாள் பயணமாக ஓர் ரசனை மிகு இடத்திற்கு சென்று, விளையாடி, கூடி உணவு உட்கொண்டு, பின்னர் சினிமா சார்ந்த வகுப்பு அல்லது கலந்துரையாடலில் பங்கேற்பது.
மாதம் ஒரு வெள்ளிக்கிழமை இரவு உலக சினிமா ஒன்றை அருண் மோ அவர்களுடன் பார்த்து பார்த்து, அதுபற்றி விடிய விடிய விவாதிப்பது, அதில் இருந்து புதிய திரைமொழி, கருத்தாக்கங்களை கற்றுக்கொள்ளுதல். படம் சார்ந்து அருண் மோ அவர்களின் வகுப்பும் நடைபெறும். (எந்த வெள்ளி என்பது குழுவில் அறிவிக்கப்படும்)
உறுப்பினர்களுக்காக மட்டும் மாதம் ஒரு பயிற்சிபட்டறை இலவசமாக நடக்கும்.
மாதத்தின் இறுதி சனிக்கிழமை உறுப்பினர்கள் குறும்படம் எடுத்திருந்தால் அதை திரையிட்டு பார்க்கலாம், அல்லது வேறு சிலரது குறும்படங்கள் திரையிடப்பட்டு அதுபற்றி விவாதம் நடைபெறும்.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து ஜீரோ பட்ஜெட்டில் ஒரு நிமிட குறும்படம் எடுப்பதற்கான பயிற்சி.
உறுப்பினர்களுக்கான வாட்சாப் குழுவில் நிறுவனர் அருண் மோ அவர்களுடன் நேரடி கலந்துரையாடல் நடைபெறும். கதையை உருவாக்குதல், கட்டுரை எழுதுதல், குறும்படம், அனிமேஷன் படம் பார்த்து திரைக்கதை எழுதுதல் போன்றவற்றிற்கான பயிற்சி வாட்சாப் குழுவிலேயே அளிக்கப்படும்.
வருடத்திற்கு ஒருமுறை, அருண் மோ அவர்கள் தலைமையில் சினிமா சார்ந்த வெளிமாவட்டம் அல்லது வெளிமாநிலத்திற்கு உறுப்பினர்கள் கூட்டாக சேர்ந்து பயணம் செய்யலாம்.
பியூர் சினிமாவில் வாங்கும் புத்தகங்களுக்கு 10 முதல் 30 சதவீதம் வரை கழிவு வழங்கப்படும்.
பியூர் சினிமா நடத்தும் பயிற்சிப்பட்டறையில் உறுப்பினர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
பியூர் சினிமா நடத்தும் இலவச கலந்துரையாடல், மற்ற கூட்டங்களில் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். உறுப்பினர்கள், நிகழ்விற்கு தாமதமாக வந்தால் இந்த முன்னுரிமை கிடைக்காது.
உறுப்பினர்களாக பங்கேற்க நிபந்தனைகள்:
மாதம் 1000 ரூபாய் சந்தா செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் 9 ஆம் தேதிக்குள் சந்தா தொகை செலுத்த வேண்டும். சந்தா செலுத்தாதவர்கள் உறுப்பினர் குழுவில் இருந்து நீக்கப்படுவார்கள். மேலும் அடுத்த மூன்று மாதங்கள் மீண்டும் உறுப்பினராக இயலாது.
ஒவ்வொரு மாதமும் உறுப்பினர்களுக்கான சந்திப்பு பியூர் சினிமாவில் நடைபெறும். இந்த சந்திப்பில் உறுப்பினர்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் இச்சந்திப்பில் கலந்துக்கொள்ளாவிடில் உறுப்பினராக நீடிக்க இயலாது.
சினிமா கல்வியை அடிப்படையாக கொண்டு இயங்கும் குழு என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளும் ஒழுங்கும் பின்பற்றப்படும் இக்குழுவில் அதனை மீறும் நபர்களை குழுவில் இருந்தே நீக்கும் முழு உரிமையும் பியூர் சினிமா நிர்வாகத்திற்கு உண்டு. எவ்வித காரணமும் கூறாமல் ஒழுங்கு நடவடிக்கை பெயரில் ஒருவரை உறுப்பினர் குழுவில் இருந்து நீக்கவும் பியூர் சினிமா நிர்வாகத்திற்கு அதிகாரம் உண்டு.
மேற்சொன்ன சில சலுகைகள் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்தே அமையும். குறைவான உறுப்பினர்கள் கலந்துகொள்ளும்பட்சத்தில் சில முன்னெடுப்புகள் அன்றைய தேதிக்கு ரத்து செய்யப்படலாம்.
மேற்சொன்ன எல்லா முன்னெடுப்புகளிலும் நிகழ்வுகளிலும் பெரும்பாலானவற்றில் உறுப்பினர்கள் கலந்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். குறிப்பாக குழுவில் கொடுக்கப்படும் கற்றல் வேலைகளை சரியாக செய்திட வேண்டும். அவ்வாறு ஆக்டிவாக இல்லாத உறுப்பினர்கள், observers என்கிற இரண்டாம்நிலை உறுப்பினர் குழுவிற்கு மாற்றப்படுவார்கள்.
PURE:
திரையரங்கம் செல்வது, பயணம் செல்வது போன்ற முன்னெடுப்புகளில் டிக்கெட், உணவு உள்ளிட்ட செலவுகளும் உறுப்பினர்களுடையது. அவரவர் செலவுத்தொகையை அவரவர் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பியூர் சினிமா உறுப்பினர் திட்டம் 2 - Observers (PCM - O)
பியூர் சினிமாவில் தற்போது Observers என்கிற இரண்டாம் நிலை உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. வேறு சில பணிகளை செய்துக்கொண்டு, விரைவில் சினிமாவில் முழுநேரமாக இயங்கவிருப்போர், மாணவர்கள், சினிமா ஆர்வலர்கள், நிறைய முன்னெடுப்புகளில் கலந்துக்கொள்ள இயலாதோர் இந்த உறுப்பினர் திட்டத்தில் இணைத்துக்கொள்ளலாம். ஆக்டிவாக (Non-Active Members) இருக்க இயலாதவர்கள் இந்த உறுப்பினர் குழுவில் இணைத்துக்கொள்ளலாம். உறுப்பினர்களுக்கான முன்னெடுப்புகளில் கலந்துக்கொள்வது அவரவர் விருப்பம். கட்டாயமல்ல.
Observers உறுப்பினர்களுக்கான பயன்கள்:
மாதம் ஒருமுறை பியூர் சினிமா மாணவர்களோடு உறுப்பினர்கள் சேர்ந்து திரையரங்கில் படம் பார்த்து விவாதிக்கும் வாய்ப்பு.
மாதத்தின் இறுதி சனிக்கிழமை உறுப்பினர்கள் குறும்படம் எடுத்திருந்தால் அதை திரையிட்டு பார்க்கலாம், அல்லது வேறு சிலரது குறும்படங்கள் திரையிடப்பட்டு அதுபற்றி விவாதம் நடைபெறும்.
உறுப்பினர்கள் 5 பேருக்கு மேல் சேர்ந்து கூட்டாக வந்தால், அவர்கள் விரும்பும் தினத்தில் பியூர் சினிமா அரங்கை புக் செய்து, விரும்பும் உலக சினிமாவை திரையிட்டு, பியூர் சினிமா மாணவர்களோடு கலந்துரையாடலாம். குறைந்தது 5 உறுப்பினர்கள் கூட்டாக சேர்ந்து முன்கூட்டியே தேதி மற்றும் நேரத்தை கூறி அரங்கை முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும். வார நாட்களில் இதற்கான அனுமதி வழங்கப்படும். சனி ஞாயிறுகளில் அனுமதி இல்லை.
பியூர் சினிமாவில் சினிமா கற்றல் பிரிவை சார்ந்த உறுப்பினர்கள் அல்லது மாணவர்கள் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை குறும்படம் எடுக்கும்போது அதில் observers ஆக பங்கேற்க அனுமதிக்கப்படும். ஆனால் உருவாக்கத்தில் பங்கேற்க இயலாது.
பியூர் சினிமாவில் வாங்கும் புத்தகங்களுக்கு 10 முதல் 30 சதவீதம் வரை கழிவு வழங்கப்படும்.
பியூர் சினிமா நடத்தும் பயிற்சிப்பட்டறையில் உறுப்பினர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
பியூர் சினிமா நடத்தும் இலவச கலந்துரையாடல், மற்ற கூட்டங்களில் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். உறுப்பினர்கள், நிகழ்விற்கு தாமதமாக வந்தால் இந்த முன்னுரிமை கிடைக்காது.
Observers உறுப்பினர்களாக பங்கேற்க நிபந்தனைகள்:
மாதம் 500 ரூபாய் சந்தா செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் 9 ஆம் தேதிக்குள் சந்தா தொகை செலுத்த வேண்டும். சந்தா செலுத்தாதவர்கள் உறுப்பினர் குழுவில் இருந்து நீக்கப்படுவார்கள். மேலும் அடுத்த மூன்று மாதங்கள் மீண்டும் உறுப்பினராக இயலாது.
ஒவ்வொரு மாதமும் உறுப்பினர்களுக்கான சந்திப்பு பியூர் சினிமாவில் நடைபெறும். இந்த சந்திப்பில் உறுப்பினர்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் இச்சந்திப்பில் கலந்துக்கொள்ளாவிடில் உறுப்பினராக நீடிக்க இயலாது.
சினிமா கல்வியை அடிப்படையாக கொண்டு இயங்கும் குழு என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளும் ஒழுங்கும் பின்பற்றப்படும் இக்குழுவில் அதனை மீறும் நபர்களை குழுவில் இருந்தே நீக்கும் முழு உரிமையும் பியூர் சினிமா நிர்வாகத்திற்கு உண்டு. எவ்வித காரணமும் கூறாமல் ஒழுங்கு நடவடிக்கை பெயரில் ஒருவரை உறுப்பினர் குழுவில் இருந்து நீக்கவும் பியூர் சினிமா நிர்வாகத்திற்கு அதிகாரம் உண்டு.
மேற்சொன்ன சில சலுகைகள் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்தே அமையும். குறைவான உறுப்பினர்கள் கலந்துகொள்ளும்பட்சத்தில் சில முன்னெடுப்புகள் அன்றைய தேதிக்கு ரத்து செய்யப்படலாம்.
திரையரங்கம் செல்வது, போன்ற முன்னெடுப்புகளில் டிக்கெட், உணவு உள்ளிட்ட செலவுகளும் உறுப்பினர்களுடையது. அவரவர் செலவுத்தொகையை அவரவர் பார்த்துக்கொள்ள வேண்டும்.