Sound design and Independent Film Making - Two days workshop
ஒலி வடிவமைப்பு மற்றும் சுயாதீன சினிமா உருவாக்கம் - இரண்டு நாள் பயிற்ச்சிப்பட்டறை
22.03.2025 சனிக்கிழமை பிரதாப் அவர்களின் ஒலி வடிவமைப்பு பயிற்சி 23.03.2025 ஞாயிற்றுக்கிழமை சுயாதீன திரைப்பட உருவாக்க பயிற்சி
தொடர்புக்கு: 9840644916
சினிமாவிற்கு சவுண்ட் என்கிற ஒலி எவ்வளவு முக்கியம், சவுண்டை வைத்துக்கொண்டு எப்படி கதை சொல்ல இயலும்? சவுண்ட் சிறப்பாக இருக்க என்னென்ன செய்ய வேண்டும், லைவ் சவுண்ட் செய்வதில் இருக்கும் சிக்கல்கள் என்ன? ஒலி பற்றிய அறிமுகத்துடன், ஒரு படத்தில் ஒலி எந்த அளவு முக்கியம் அதை எப்படி கையாளுவது? அதை எப்படி நடைமுறைப்படுத்துவது? என்றெல்லாம் நமக்கு கற்றுக்கொடுக்க பிரதாப் ( wave worx sound satation ) அவர்களின் ஒரு நாள் பயிற்சி நடைபெறவுள்ளது. ஆடுகளம், அசுரன், வடசென்னை, விடுதலை பாகம் 1, விசாரணை போன்ற படங்களின் ஒலி அமைப்பாளராக பணிபுரிந்த பிரதாப் தமிழ் சினிமாவின் மிக முக்கிய ஒலிக்க்லைஞர். நேரம் இருக்கும்பட்சத்தில் பிராக்டிகலாக ஒலியை வைத்து ஸ்டுடியோ பயிற்சியும் உண்டு. ஒலி பற்றிய முதல் பயிற்சிப்பட்டறை இதுவே.
இரண்டாம் நாள் ஞாயிறு, வெங்காயம், பயோஸ்கோப் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் அவர்களின் ஒரு நாள் வகுப்பும் நடைபெற உள்ளது. சுயாதீன (independent) திரைப்படத்தை எடுக்கும் போது வரும் பிரச்சனைகள் அதை எப்படி தவிர்க்கலாம். ஜீரோ பட்ஜெட்டியில் எப்படி ஒரு படத்தை உருவாக்குவது? சுயாதீன படத்துக்கான திரைக்கதை எப்படி அமைப்பது? production, pre production,post production போன்றவற்றையும் கற்றுக்கொடுக்க உள்ளார். இவர் தனிமனிதராக ஒரே நபராக நடித்து, ஒளிப்பதிவு செய்து, எடிட் செய்து என சகலத்தையும் முடித்து ஒன் என்கிற திரைப்பப்டத்தை முடித்துள்ளார். அந்த படம் சார்ந்த அவரது பயிற்சி மொரெ போதும் உங்களை சினிமா எடுக்க தூண்டும். சினிமா எடுக்க பணம் முக்கியமல்ல என்பதை உணர்த்தும் முக்கியமான பயிற்சி.
இரண்டு நாள் பயிற்சிக்கும் கட்டணம் உண்டு-