*மண்டியிடுங்கள் தந்தையே*

மண்டியிடுங்கள் தந்தையே” என்பது எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் நாவல் ஆகும். இந்த நாவல், உலகப்புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் வாழ்க்கையில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. தமிழில், ஒரு ரஷ்ய எழுத்தாளரின் வாழ்க்கையை விவரிக்கும் முதல் நாவல் இது எனக் கூறப்படுகிறது.
மகன் தனது தந்தையை மண்டியிட சொல்லி கேட்க்கும் சூழல் வருமாயின், அந்த தந்தை எந்த அளவு பெரிய, மன்னிக்க முடியாத குற்றத்தை செய்திருக்க வேண்டும். வருமானம் ஈட்டாமல் இருந்தர்க்காகவோ, பொறுப்பற்று திரியும் தந்தையை பார்த்தோ இந்த கேள்வி எழ வாய்ப்பில்லை. நிச்சயம் ஒரு துரோகத்தை அல்லது சமுதாயத்தால் துரோகம் என்று கட்டமைக்கப்பட்ட ஒன்றை அவர் செய்திருப்பின் இது நடந்திருக்கும் .

ஆம் இது ரஷ்ய எழுத்தாளர் மேதை லியோ டால்ஸ்டாய் அவரது வாழ்கையின் ஒரு பகுதி.

தனது 35 வயது வரை புகை பிடித்தல், கொண்டாட்டம், மது, மாது என்று ஊதாரியாகவே வாழ்ந்து வந்தார், டால்ஸ்டாய். எழுத்து, இலக்கியம் எல்லாம் ஒருபுறம் சென்றுக் கொண்டிருந்தாலும், தனது கொண்டாட்டங்களை ஒரு போதும் அவர் விட்டுக்கொடுத்ததே இல்லை. பெண்கள் விஷயத்திலும், தான் விரும்பும் பெண்களை அவரது விருப்பதோடு ஆட்கொள்வதையும் பழக்கமாக்கிக்கொண்டார்.அப்படியாக வந்த ஒருத்தி , மற்ற பெண்களைக்காட்டிலும் அதிக கவர்ச்சியான அதேசமயம் மிகவும் அன்பான பெண்ணாக இருந்தாள்.

டால்ஸ்டாய் அவரது வாழ்வில் எத்தனையோ பெண்களைக் கடந்திருந்தாலும் அனைவரையும் நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் எஜமான் தம்மை ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று தெரிந்தும், அவரது குழந்தையை கருவில் சுமந்தவாறு அவரது பண்ணையிலேயே வேலை செய்கிறாள், அவரது காதலி அக்ஸின்யா .. அந்த குழந்தைக்கு தான் யாருடைய பிள்ளை என்று தெரியவருகிறது. அதற்கு பின் நடந்த சம்பவங்களை கிடைத்த தரவுகளைக்கொண்டு கொஞ்சமாக புனைந்து கொஞ்சமும் சலிபூட்டாமல் புத்தகத்தை முடித்திருக்கிறார் ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன். டால்ஸ்டாய் அவர்களின் கொள்கைகள், அரசுக்கு எதிரான அவருடைய போராட்டங்கள் நடவடிக்கைகள் எல்லாமே ஆங்காங்கே கூறிவிடவும் தவறவில்லை.

அவருடைய மனைவியைத் திருமணம் செய்து தனது பண்ணைக்கு அழைத்துவந்து, மொத்த நிர்வாகத்தையும் அவளை நிர்வகிக்க விட்டு விட்டு தனது எழுத்தை மட்டுமே கட்டிக்கொள்ளக் கூடிய கொடுப்பினை இன்றளவும் எத்தனை பேருக்கு எட்டாக் கனியாக இருக்கிறது .
தனது 13 குழந்தைகளையும் பெற்று வளர்த்து, பண்ணைகளையும் நிர்வகித்து, கணவனுக்கும் உறுதுணையாக நிற்கும் முதல் மனைவி சோபியா மற்ற முழுக்க முழுக்க காதலுக்காக ஒரு குழந்தையையே சுமந்து, இம்மியளவு அவருடைய பெயருக்கு களங்கம் வராமல் வேலையாளாக வாழ்ந்து வந்த அவருடைய மறைமுக காதலி அக்ஸின்யா ஆகட்டும், பெண்களின் கதாபாத்திரம் மிகவும் சக்திவாய்ந்ததாக்க உருவாக்கப்ப்ட்டுள்ளது.

சில சிறப்பான வரிகள்

• இயற்க்கை கடந்தகாலத்தை நினைவு வைத்துக் கொள்வதில்லை.

• காலம்தான் மனிதர்களின் பிரச்சனை.அவர்களால் நிகழ்காலத்தில் மட்டும் வாழமுடியாது.

• ரகசியங்கள் இல்லாத மனிதர்கள் யார்? எத்தனையோ ரகசியங்களை மனிதன் இறக்கும்போது கூடவே புதைந்து போய்விடுகின்றன.

• சந்தோஷம் என்பதை எதை வைத்து முடிவு செய்வது.எல்லா சந்தோஷங்களும் மழை போலத்தானே எவ்வளவு நேரம் மழை தொடர்ந்து பெய்யமுடியும்.மழை நின்றவுடன் வெறுமை கவிழ்ந்துவிடுகிறதே.

• சொர்க்கம் நிச்சயம் வானில் இருக்கமுடியாது.அது மனிதனின் மனதிற்குள் இருக்கிறது.மனித மனமே சொர்க்கத்தின் நுழைவாயில்.

• ஒருவன் மற்றவர்களுக்காக இல்லை என்றாலும் தனக்குத் தானே உண்மையை சொல்லிக் கொள்ளத்தானே வேண்டும்.

• கலையின் வேலை மனிதர்களை மகிழ்ச்சிப்படுத்துவது மட்டுமில்லை.நெறிப்படுத்துவதும், வழிகாட்டுவதும்,மேம்படுத்துவதும்,அதன் வேலைகள்.

• மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் மிகக்குறைவான நேரத்தையே தனக்காகச் செலவு செய்கிறார்கள்.பெரும்பகுதி வாழ்க்கை அடுத்தவர்களுக்கானது.வேலைக்கானது, சம்பாத்தியத்திற்கானது,ஒரு வகையில்
இது முட்டாள்தனமான செயல், .
இன்னோரு வகையில் மனிதனின் வாழ்க்கை இதனால்தான் அர்த்தமுள்ளதாகிறது.

• பறவைகள் ஒரு மரத்தில் கூடு கட்டி அடைந்தாலும் அதற்கு முழு ஆகாசமும் தேவைப்படுகிறது.அப்படிதான் மனிதனும்.இந்த மொத்த நிலமும் தனக்கே வேண்டும் என ஒருவன் ஆசைப்படுவதில் தவறு ஒன்றுமில்லை.

• பெண்கள் விஷயத்தில் எல்லாமும் தலைகீழ்தான்.அவர்கள் ஏமாற்றியவனையும் மன்னிப்பார்கள்.அவனுக்காக உருகுவார்கள்.பிரார்த்தனை செய்வார்கள்.தெய்வமாக எண்ணி வணங்குவார்கள்.தன்னைத் தியாகம் செய்துகொள்வது பெண்களுக்குப் பிடித்தமானது.

மேலும் ஆசிரியர் எஸ். ராமகிருஷ்ணன் எழுத்தில் சொல்லப்படாத உணர்வுகள் என எதுவும் மிச்சமின்றி நிறைவு செய்திருந்தார். கதையின் மாந்தர்களை மிக துள்ளியமாக வடிவமைத்துள்ளார், முக்கியமாக ஊரில் உள்ள எல்லாருடைய ரகசிய வாழ்க்கை பற்றி தெரிந்த மனிதன் ஒருவன் இருக்கிறான்,ஆனால் அவன் தான் முட்டாள் என்று அவனை எல்லோரும் முட்டாள் டிமிட்ரி என அழைக்கின்றனர். முட்டாள் டிமிட்ரி இறந்த பின் கதை நாயகனாக வரும் தீமோபி தனக்கு நண்பர்கள் யாரும் இல்லாது தனிமையில் இருப்பதும், அதன் பின் ஓல்கா வை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவளுடன் சந்தோசமாக வாழ்க்கை தொடங்கிய சில நாள்களில் அவளின் இறப்பு அதை ஏற்றுக் கொள்ள மனமில்லாத தீமோபி வருத்தமடைவதும் வாசிப்பவர்கள் கண்களில் ஒரு கண்ணீர் விட வைத்தது. கதையின் இறுதியில் தாயை இழந்த கதாநாயகன் தந்தையின் பாசத்தையும் அரவனைப்பினையும் அவரின் ஆசியும் பெறுகிறான இல்லையா என்பதை நோக்கி நாவல் ஈர்க்கிறது…

ஒரு நல்ல புத்தகத்தை வாசித்த பின் மனதில் ஏற்படும் மகிழ்ச்சி வேறு எதிலும் ஒரு வாசகனுக்கு கிடைப்பது இல்லை.

இந்த புத்தகத்தை வாங்க பியூர் சினிமா அலுவலக எண்ணை தொடர்புகொள்ளுங்கள்: 9840644916![enter image description here]enter image description here

Related posts