Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

பெருங் கலைஞர்கள் இந்தப் புவியில் அதிசயங்களை ஸ்தாபிப்பவர்கள் என்பதற்கான காலாதீதி உதாரணங்களில் ஒருவர் சார்லி சாப்ளின். உலக முழுதுமுள்ள எண்ணற்ற ரசிகர்களைத் தன் கலா வல்லமையால் ஈர்த்ததொரு பேராளுமை. அமெரிக்கத் திரைப்படக் கல்லுரி 1999ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பு, உலகத் திரைப்பட வரலாற்றில் மிகச் சிறந்த பத்து நடிகர்களில் சாப்ளினும் ஒருவர் என்று கூறுகிறது. ஒரு முறை பெர்னாட்ஷா, “திரைபடத் துறையில் தோன்றிய ஓர் உண்மையான மேதை சாப்ளின்” என்று சொன்னார். கற்பனையிலும் தோற்றத்திலும் நடிப்பிலும் உள்ள தனித்துவம், பிற கலைஞர் எவருக்கும் சித்திக்காத ஒன்று. தமது அழுத்தத்தால் நமது அனுபவங்களை விரித்தளிக்கும் இவரது படங்கள், திரை ரசனையின் கலங்கரை விளக்கங்களாகியிருக்கின்றன. சாப்ளின், ஓர் எளிய மனிதனும் படைப்பின் தேவதையுமாவார். மனங்கொள்ளாத் துயரமும் களங்கமற்ற மகிழ்ச்சியும் இவர்தான். தற்குறி வேடமும் தத்துவ தரிசனமும்...
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.