‘எனது நாடக வாழ்க்கை’ என்ற தலைப்பில் முத்தமிழ்க் கலா வித்துவரத்தினம், ஔவை திரு டி.கே. ஷண்முகம் நாடகத் துறையில் தமக்கு ஏற்பட்ட அனுபவக் கனிகளைப் பிழிந்தெடுத்து, அந்த நறுஞ்சாற்றினை நாமனைவரும் பருகிடமாறு அரியதோர் நூல் வடிவில் தமிழ் மக்களுக்கு இன்று வழங்கியுள்ளார்கள்.
மணிவிழா எடுத்திருக்கும் இந்த இனிய மகிழ்ச்சிகரமான நாளிலே நாடகத்துறையில் தொல்காப்பியர் எனத் தகும் எல்லா விதமான ஆற்றல்களும் நிரம்பிடப் பெற்ற அன்னார், எளிய சுவையான நடையிலும், கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தும், இக்கால இளைஞர்களின் சிந்தனைக்கு விருந்தாகவும், கருத்தத் தெளிவுக்கு மருந்தாகவும் இதனைப் படைத்துள்ளர்கள்.
நாடகத்துறையில் தோல்வி காணது வெற்றிகள் பல ஈட்டியுள்ள அவர்கள், நல்ல தமிழ் பற்றும் தமிழ் சான்றோர்கள் நீங்காத பக்தியும் உடையவர்கள்; அரசியல் தலைவர்களிடத்தில் நல்ல முறையிலான தொடர்பும் மதிப்பும் கொண்டுள்ளவர்கள் என்பதையல்லாம் இந்நூல் நன்கு எடுத்துக் காட்டுகிறது.
பொதுவாகத் தமிழ் மக்கள் அனைவரும் போற்றுதற்குரியது என்ற என் பணிவான கருத்தினைத் தெரிவித்துத் திரு டி.கே. எஸ் அவர்களின் அரிய முயற்சி வெல்க என வாழ்த்துகிறேன். வணக்கம்.
மு.கருணாநிதி { முன்னால் முதலமைச்சர் }
No product review yet. Be the first to review this product.