இயக்குனர் லெனின் பாரதி நடத்தும் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை

09-06-2019, ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
நன்கொடை: 1000 ரூபாய் (ஆயிரம் ரூபாய்)

தலைப்பு: கதை எப்படி காட்சியாகிறது, காட்சி எப்படி ஷாட் ஆகிறது, ஷாட் பிரிக்கும் வழிமுறைகள், அரசியல் சினிமாவின் தேவை.

முன்பதிவு செய்ய: 9840644916, 044 48655405

பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்
நண்பர்களே தமிழ் ஸ்டுடியோ பேரியக்கம் பெரும்பாலான எல்லா சேவைகளையும் இலவசமாகவே செய்து வருகிறது. ஆனாலும் இயக்கத்திற்கு தேவையான நிதி திரட்டும் வகையில் அவ்வப்போது ஒரு பயிற்சிப்பட்டறையை நடத்தி வருகிறது. தவிர சினிமா கல்வியை எளிமையாக எல்லாருக்கும் பெரிய பொருட்செலவின்றி கொண்டு செல்லும் நோக்கிலும் இந்த பயிற்சிப்பட்டறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் சினிமா உருவாக்கம், அரசியல் சினிமா உருவாக்கம் பற்றிய மிக முக்கியமான பயிற்சிப்பட்டறை ஒன்றினை இயக்குனர், தோழர் லெனின் பாரதி நடத்திக்கொடுக்க இருக்கிறார். மக்களிடம் நிதி திரட்டி நடத்தப்படும் எல்லா அமைப்புகள் பற்றியும் பெரும் அக்கறையும், அதன் தீவிரத்தன்மை குறித்த ஆர்வமும் இயக்குனர் லெனின் பாரதி அவர்களுக்கு எப்போதும் உண்டு. அவரது மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படம் தமிழில் வடிவம் உள்ளடக்கம் பற்றிய மிக முக்கியமான திரைப்படம். தமிழ் ஸ்டுடியோவின் படச்சுருள் மாத இதழ் இதுவரை எந்த ஒரு திரைப்படத்திற்கும் சிறப்பிதழ் வெளியிட்டது கிடையாது. ஆனால் மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்திற்கு சிறப்பிதழ் வெளியிட்டது. அத்தகைய சிறப்பு வாய்ந்த திரைப்படத்தை இயக்கியவர் லெனின் பாரதி. பெரும்பான்மையான மக்களிடம் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தை பெரும் சமரசங்கள் எதுவும் இன்றி இயக்கினார் தோழர் லெனின் பாரதி. 
தமிழ் ஸ்டுடியோவின் நிதியாதாரம், மற்றும் சினிமா கல்வியை எல்லாருக்கும் கொண்டு செல்லும் நோக்கில் நடத்தப்படும் இந்த பயிற்சிப்பட்டறையை ஒரு பைசா கூட பெற்றுக்கொள்ளாமல் நடத்திக்கொடுக்க முன்வந்துள்ளார். அவருக்கு தமிழ் ஸ்டுடியோவின் பெரும் நன்றியை உங்கள் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். இந்த பயிற்சிப்பட்டறை உங்கள் சினிமா பற்றிய அத்துணை பார்வைகளையும் மாற்றியமைக்கலாம். சினிமாவை உங்களுக்கு இன்னொரு கோணத்தில் கற்றுக்கொடுக்கலாம். நேர்மையான, உண்மையான சினிமாவை நீங்கள் பயிற்சியின் முடிவில் உணர்ந்துகொள்ளலாம். இந்த அனுபவத்தை பெற, அவசியம் இந்த ஒரு நாள் பயிற்சிப்பட்டறையில் கலந்துக்கொள்ளுங்கள். இந்த வாய்ப்பு வாழ்வில் எப்போதாவதுதான் கிட்டும். தவறவிடாதீர்கள். 
முன்பதிவு செய்ய: 9840644916, 044 48655405

Details

  Start Date : 09-06-2019

  End Date : 09-06-2019

  Event Location : Vadapalani

  Event Venue : Pure cinema Bookshop

Contact Details

  Contact Person : லெனின்

  Email : லெனின்@gmail.com

  Phone Number : 9840644916

  Event Organizer : purecinemabookshop@gmail.com

  Organized By: லெனின்