கொரில்லா பிலிம் மேக்கிங் தலைப்பை பார்த்த உடனே இதற்கு முன் கேள்விப் படாத விஷயமாக இருக்கிறதே என்று தான் வாசிக்கத் துவங்குவோம்.இந்த புத்தகம் சினிமாவிற்கான பிறப்பு துவங்குவதிலிருந்து ஆரம்பித்து அதனுடைய கோட்பாடுகள் பிளாட் வகைகள் ,திரைக்கதைகள் ,அதன் வடிவமைப்பு எனக் கண் முன்னே விஸ்வரூபம் எடுக்கிறது.இதுவரை தமிழில் எந்தப் புத்தகமும் இவ்வளவு தெளிவாக கேமிரா கோணங்களைப் பற்றியோ ,எடிட்டிங் பற்றியோ மற்ற தொழில்நுட்ப விஷயங்களை பற்றியோ விஸ்தரித்தது கிடையாது. திரைப்படத்திற்கான மொழி காட்சி மொழி அதை ஆணித்தரமாகவும் சிறிது நகைச்சுவையுடனும் இந்தப் புத்தகம் புரிய வைக்கிறது.அதோடு எந்த வித பெரிய பண முதலீடும் இல்லாமல் கேமராவும்,நடிகர்களையும் மற்ற அடிப்படை வசதிகளை வைத்து மட்டுமே ஒரு தரமான சினிமாவை தர முடியும் என்ற மிகப்பெரிய உண்மையையும் உத்வேகத்தையும் தருகிறது.நமது கோடம்பாக்கத்தில் கதையை வைத்துக் கொண்டு ப்ரோடீயுசர் கள் பின் அலைந்து கொண்டிருக்கும் இயக்குனர்கள் இந்த புத்தகத்தை படித்தால் தன் கையில் உள்ள கதையை உலக தரத்திற்கு மாற்றிவிட்டு ,களத்தில் இறங்குவார்கள் என்பது திண்ணம்.
No product review yet. Be the first to review this product.