ஐரோப்பிய சினிமாவில் தனித்ததொரு வகையினமாக சுவிஸ் திரைப்படத்தினைக் கூற முடியும்; அதனை ஏற்படுத்தியவர் இங்மர் பெர்க்மென். 'ஒயில்ட் ஸ்ட் ராபரிஸ்', 'பெர்சொனா', வர்ஜின் ஸ்பிரிங்', 'சைலன்ஸ்' 'கிரைஸ் அண்டு விஸ்பர்ஸ்' போன்ற படங்கள் மறக்கமுடியாதவை. பெர்க்மென் நாடகத்துறையில் இருந்து திரைப்படத்திற்கு வந்தவர். அதனால் நாடகத்தின் பல்வேறு பரிமாணங்களை இவரது படத்தில் பார்க்கலாம். நாடகத்தன்மையிலிருந்து சினிமா மொழிக்கு கொண்டு சென்றதில் உலகப்புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் 'ஸ்வென் நிக்விஸ்ட்டுக்கு' பெரும் பங்கிருக்கிறது. சுவிஸ் வெளிச்சம், சுவிஸ் அமைதி போன்றவைகளை இவரது படங்களில் மட்டுமே பார்க்கமுடியும்.
பெர்க்மென்னின் படங்களில் காணக்கூடிய கதாபாத்திரங்கள் கற்பனையானவை அல்ல என்பதையும், அவரது படங்களில் புரியாத பல விஷயங்கள், அவரது தன்வரலாறான 'மாய விளக்கினை' படிக்கும் போது புரியவரும். பெர்க்மென் இயக்குநர் மட்டுமல்ல. சிறந்த எழுத்தாளருமாவார் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த மாயவிளக்கு.
No product review yet. Be the first to review this product.