இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சிகள் உருவாக்கிக் கொடுக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளத் தேவைப்படுவதெல்லாம் மாற்றி யோசிக்கும் சிந்தனை முறையும், அப்படி மாற்றிப் புதுமையாக யோசித்த ஒன்றைச் செயல்படுத்தும் துணிவும் மட்டுமே. அப்படி மாற்றி யோசித்து அதன் படி துணிந்து செயல்படும் பலர் மேற்கின் திரைப்படத் துறையைத் தலைக் கீழாகப் புரட்டிப்போட்டுக்கொண்டடிருக்கிறார்கள்.
இதன் காரணமாகத் தொழில் நுட்ப நிறுவனங்கள் வெற்றிகரமான திரைப்படத் தயாரிப்பாளர்களாகவும், பெரும் தயாரிப்பு நிறுவனங்கள் தொழில் நுட்ப நிறுவனங்களைப் போலச் செயல்படும் மாற்றங்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்பே அங்கே தொடங்கிவிட்டது.
இணைய மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பங்களின் வளர்ச்சிகளைக் கச்சிதமாகப் பிடித்துக்கொண்டு சுமார் நூறு ஆண்டுகள் அனுபவம் கொண்ட மிகப் பெரும் ஆலிவுட் தயாரிப்பு நிருவனங்களுக்குச் சவாலாக எழுந்து நிற்கும் இணையத் தொழில் நுட்ப நிறுவனங்கள் மேற்கில் தோன்றி வளர்ந்தபடி இருக்கின்றன.இந்த நிறுவனங்களின் தோற்றமும் வெற்றியும் திரைப்பட ஆக்கமும் வினியோகமும் இனியும் வழமையான முறையிலேயே தொடர்ந்துகொண்டுதான் இருக்க வேண்டுமா என்கிற கேள்வியை எழுப்பி அப்படியொன்றும் அவசியம் இல்லை என்கிற பதிலையும் கொடுக்கிறது.
-நவீன அலெக்சாண்டர்
வர்ஷினி
No product review yet. Be the first to review this product.