இருட்டிலிருந்து வெளிச்சம்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

இருட்டிலிருந்து வெளிச்சம்

Weight
375.00 Gms

Out of Stock

240.00
முந்தைய தலைமுறையினரின் தலைவர்கள் பலருக்கச் சினிமாவின் அனைத்துப் பரிமாணங்களையும் உணர்ந்தறிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. காந்தி, ராஜாஜி, நேரு, திலகர், கோகுலே, அம்பேத்கர், பெரியார் இன்னும் பலருக்குச் சினிமா பற்றி விஷேஷாமன அபிப்ராயம் இருந்ததில்லை. சினிமாவை அற்பமாகச் கருதினார்கள் என்றுகூடச் கூறலாம். பொதுவுடமைவாதிகளும் நாஜிகளும் சினிமாவின் சாத்தியக் கூறுகளை உணர்ந்திருந்தார்கள். கலைத்துறையில் முன்னணியில் இருந்தவர்ககளுக்கும் இலக்கியவாதிகளுக்கும் சினிமா மீது கவர்ச்சி, இகழ்ச்சி கலந்தே இருந்தது. சினிமாவை மிகவும் துச்சமாகக் கருதிய சில சிந்தனையாளர்களும் இருந்தார்கள். பரவலான வீச்சுடைய எந்தச் சாதனமும் துல்லிய கலை வெளிப்பாட்டுக்கு வழிவகுக்காது என்பது அவர்கள் கருத்து. பல சமூகத் தலைவர்கள் சினிமாவால் நன்மையைவிட தீமையே அதிகம் என்று நம்பினார்கள். மதத் தலைவர்கள் சினிமாவை ஒட்டுமொத்தமாகவே தீயதாகக் கருதி வந்திருக்கிறர்கள்.

இதே நேரத்தில் சினிமாவும், அதற்கே உரிய கலைப் பண்புகளை வெளிக்காட்டும் படைப்புக்களை உலகத்துக்கு அளித்த வண்ணம் இருந்தது. இதர கலைச் சாதனங்களில் சாத்தியமே இல்லாத சமூக ரீதியாகவும் சினிமா மிகப்பெரிய சாதனை விளைவித்தது. உலகில் ஜனநாயக உணர்வு பரவலானதற்குச் சினிமா ஒரு முக்கிய காரணம்.

 -அசோகமித்திரன்   
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.