என்.எஸ். கிருஷ்ணனுக்கு கலைவாணர் என்ற பட்டத்தைக் கொடுத்தது யார், எப்பொழுது, என்.எஸ்.கே. – டி. ஏ. மதுரம் காதலும் திருமணமும், உடுமலை நாராயணகவி திரைத்துறைக்கு வந்தது எப்படி, எம்.ஆர்.ராதா வசதிக் குறைவான நிலையிலும் நிமிர்ந்து நின்றது எப்படி, அப்போதைய பிரபல நடிகர் நடிகையர் பெற்ற ஊதியும் எவ்வளவு, டி.ஆர். ராஜகுமாரி திரைத்துறைக்கு வந்த சம்பவம், தமிழ் திரையுலகின் முதல் பாட்டு எது, என்.சி. வசந்தகோகிலத்தின் இசைத் திறமை, பி. சுசீலாவின் முதல் பாடல் எது, முகமது ‘வதனமே’ என்றானது ஏன், சிதம்பரம் ஜெயராணியின் இசைத் திறமை, அவர் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்திய பிற்கால அரசியல் பிரமுகர் யார், என்று திரு.உமர் எளிமையான நடையில் சொல்லிச் செல்லும் சம்பவங்கள் ஏராளம்.
முழுமையான பதிவு செய்யப்படாத தமிழ்த் திரைத்துறை பற்றி வெளிவந்துள்ள நூல்களில் இது தனிச்சிறப்பு பெறுகிறது. இது உண்மை; வெறும் புகழ்ச்சி இல்லை. அந்த வகையில் நூலாசிரியர் கலைமாமணி உமர் நம் அனைவரின் பாராட்டுக்கும் உரியவர்.
டாக்டர்- நல்லி குப்புசாமி செட்டி
No product review yet. Be the first to review this product.