இன்று திரைப்பட துறைக் கலைஞர்களுக்குத் தனி மரியாதை உண்டு. ஆனால் தொடக்க காலச் சமூகச் சூழ்நிலையும் தொழில்நுட்ப வசதிகளும் ஊக்கம் தருவதாக அமையவில்லை. அப்படிப்பட்ட காலத்தில், பணம் மட்டுமே எல்லாமும் என்று சொல்லப்பட முடியாத நிலையில் திரையுலகில் நடிகர், நடிகைகளும் தொழில்நுட்பக் கலைஞர்களும், இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் மிகவும் சிரமபட்டே படங்களை எடுத்தனர்.
எனவே அந்தக் காலகட்டம் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. திரைத் துறையுடன் நாற்பது அல்லது ஐம்பது வருஷங்களுக்கு முன்பிருந்தே தொடர்பு கொண்டவர்கள்தான் அந்தக் காலகட்டத்தைப் பற்றிச் சரியாக எடுத்துச் சொல்ல முடியும். அப்படிப்பட்டவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் கலைமாமணி எஸ்.எம்.உமர் அவர்கள்.
-நல்லி குப்புசாமி செட்டி
No product review yet. Be the first to review this product.