சினிமா ஒரு கடல் எனத் தெரிந்து ஒதுங்கிப் போகிறவர்களை விட அதில் குதித்து நீந்த முயற்சி செய்து கொண்டிருப்பவர்களே அதிகம். முடிவு நீந்திக் கரையை அடைந்தவர்கள் ஒரு சிலரே. தாக்கு பிடிக்க முடியாமல் மூழ்கியவர்களின் எண்ணிக்கையே அதிகம். என்ன தான் சினிமா பலபேர் வாழ்க்கையை அழித்திருந்தாலும் நாமும் ஒரு இயக்குனராகவோ, நடிகராகவோ, ஒளிப்பதிவாளராகவோ, இசையமைப்பாளராகவோ இந்த துறையில் ஏதோ ஒன்றில் சாதிக்க வேண்டும் என்ற கனவுகளோடு , புகுந்த வீடு வரும் பெண்களை போல், மனம் முழுக்க எதிர்பார்ப்புடன் சென்னையில் வந்து இறங்குபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. அப்படி ஒரு கனவுகளோடு சென்னைக்கு வந்து சினிமா என்ற கடலில் நீந்திக் கொண்டு இருப்பவரின் கதை இது.
No product review yet. Be the first to review this product.