ஜி.ஆர்.சுரேந்தர்நாத்தின் இக்கட்டுரைகள் ,ஒரு எழுத்தாளனாக இல்லாமல் ,நம்மைப் போன்ற ஒரு ரசிகனின் மனநிலையிலிருந்தே எழுதப்பட்டுள்ளதால் இக்கட்டுரையை நாமே எழுதியது போன்ற ஒரு உணர்வு ஏற்ப்படுகிறது.இந்நூலில் உள்ள “கனவுக்கன்னிகள்”கட்டுரையில் சுரேந்தரநாத் ,நம்மை கால எந்திரத்தில் ஏற்றி ஜெயப்பிரதா ,ராதா ,அமலா ,குஷ்புக்களின் காலத்திற்கு அழைத்துச் சென்று நாம் அன்று இப்படங்களைப் பார்த்த திரையரங்குகளுக்குள் உட்கார வைத்துவிடுகிறார்.பிற கட்டுரைகளில் ,நடிகைகள் ஸ்ரீ வித்யா ,ஸ்ரீதேவி ,ஸ்ரீபிரியா ,சினேகா,நயன்தாராவிலிருந்து சமீபத்திய கீர்த்தி சுரேஷ் வரை பல நடிகைகள் குறித்தும் சுரேந்தரநாத் அழகிய ரசனையுடன் அற்புதமாக எழுதியுள்ளார்.அதுமட்டுமில்லாமல் இசைஞானி இளையராஜா குறித்து சுரேந்திரநாத் எழுதியுள்ள இரண்டு கட்டுரைகளும் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
No product review yet. Be the first to review this product.