கற்றலுக்கான, வாழ்வின் நீண்ட பயணத்தில், அர்ப்பணிப்புடன் பங்கெடுத்துக்கொள்கிற ஒரு பணிவான மாணவன். போட்டோகிராஃபி துறையில் மாஸ்டர்களாகத் திகழ்கிற பலரிடமிருந்தும், கற்றுக்கொண்டவைகளை வடிகட்டி, இப்புத்தகத்தில் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
நீங்கள் புகைப்படக் கலையில் சிறந்து விளங்கவேண்டுமென்றால், உங்கள் மனம் சொல்வதைக் கேளுங்கள். அதுதான் உங்கள் தனிப்பட்ட வழிகாட்டி, அதுதான் உங்கள் போட்டோகிராஃபி மாஸ்டர். அந்த மனதிற்கு முக்கியத்துவம் கொடுங்கள். நீங்கள் எடுக்கிற புகைப்படங்களில், உங்கள் சொந்த பாணி(Style) மற்றும் பார்வையைக் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு மனிதனாக, உங்களை நீங்களே அடையாளம் காண வேண்டும். இதுதான், புகைப்படக் கலையின் பிரதானம்.
பழங்கால தத்துவவாதிகள் பலராலும், நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய ஞானம், ‘உன்னை அறிந்துகொள்’ என்பதுதான். இந்தப் புத்தகத்தின் வாயிலாகவும் உங்களை, நீங்களே கண்டுபிடியுங்கள் மற்றும் உங்களை ஒரு போட்டோகிராஃபராக அடையாளம் காணுங்கள்.
-எரிக் கிம்
No product review yet. Be the first to review this product.