1. மாநகரம்
2.கைதி
3.மாஸ்டர்
4.விக்ரம்
5.லியோ
6. வாழ்க்கையும் சினிமாவும்
ஒரு சுயாதீன (independent) திரைப்படம் செய்யலாம் என்று நினைத்தோம். நண்பர்கள் அனைவரும் பணம் போட்டு, 80 ஆயிரம் ரூபாய் செலவில், 45 நிமிட குறும்படமான 'களம்'எடுத்தோம். பிற்பாடு, கார்த்திக் சுப்புராஜ் அந்தப் படத்தைப் பெற்று 'அவியல்' குறும்படத் தொகுப்பு திரைப்படத்தின் மூலம் வெளியிட்டார். நேர அளவு அதிகமாக இருந்ததால், 25 நிமிடங்களுக்கு 'களம்' குறைக்கப்பட்டது). ஒரு தயாரிப்பாளர் கிடைத்துவிடுவார் என்ற எண்ணத்திலேயே அதை எடுத்தேன். அதிர்ஷ்டவசமாக அந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு மற்றும் பிரகாஷ் பார்த்தார்கள். 'நல்லா இருக்கு, ஏதாவது கதை இருந்தால் கொண்டு வாருங்கள்' என்றனர். அப்படித்தான் 'மாநகரம்' ஆரம்பித்தது. 2014 'இல் மாநகரம் ஸ்கிர்ப்ட் கொடுத்து, கையெழுத்திட்டேன். அன்றே வேலையையும் விட்டுவிட்டேன்.
காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டேன். அதன் பின்பு சினிமாவுக்கும் வந்தேன். எனக்கும் என் மனைவிக்கும் இடையிலான ஒரு புரிந்துணர்வுதான் நான் சினிமாவில் இருப்பதற்குக் காரணம். நான் வேலையை விடும்போது, மனைவியும் வேலையில் இல்லை. கல்யாணமான புதிதில் மாதம் 70 ஆயிரம் என இருவரும் சம்பாதித்தோம், குழந்தை பிறந்த பின் நான் மட்டும் வேலைக்குச் சென்றேன், திரைப்பட வாய்ப்புக் கிடைத்த பின் நான் வேலையை விட்டுவிட்டேன். மாத வருவாய் ஒன்றும் இல்லை. ஒரு முடிவு எடுத்தோம், "எனக்கு இரண்டாவது படம் கிடைக்கும் வரை நீ வேலைக்குப் போ, அது வரைக்கும் எனக்குப் பெரிய வருவாய் இருக்காது'' என்றேன். குழந்தைக்கு ஏழு மாதம் இருக்கும் போதே மனைவி வேறொரு வங்கியில் பணியில் சேர்ந்தார். நான் சினிமாவில் இருந்தேன். இரண்டரை வருடம் அவர் வேலைக்குச் சென்றார். மாநகரம் முடித்த பின்பு அதே தயாரிப்பு நிறுவனத்திற்கு அடுத்த படமும் கையெழுத்திட்டேன். அடுத்த ஒரு வாரத்திலேயே அவரை வேலையை விடச் செய்தேன். இந்தப் புரிதல்தான் என்னைச் சினிமாவில் நிலை நிறுத்தியது.
lokesh kanagaraj screenplay combo
- Product Code: lokesh kanagaraj screenplay combo
- Availability: In Stock
- ₹2,030.00
-
₹1,700.00
- Ex Tax: ₹1,700.00