தமிழ்த் திரைப்பட உலகில்,வரலாறு படைத்த திரைப்படங்களின் வரிசையில் இடம் பெற்றுள்ள படம் உலகம் சுற்றும் வாலிபன்.நடிகர்,இயக்குனர்,தயாரிப்பாளர் என திரையுலகின் முப்பெரும் பரிணாமங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களால் உருவாக்கப் பட்ட படம் உலகம் சுற்றும் வாலிபன்.வெளிநாடுகளில் நடப்பது போல் கதையை அமைப்பது சுலபம்,ஆனால் கதையில் குறிப்பிடபட்டிருக்கும் இடங்களுக்கே கதாபத்திர நட்சத்திரங்களை அழைத்து சென்று படபிடிப்பை நடத்தி வருவது..அந்த படத்தை மாபெரும் வெற்றி படமாக்குவது என்பதை அந்த நாளில் நினைத்துகூட பார்க்க முடியாது சுமார் 38 ஆண்டுகளுக்கு முன் டோக்கியோ,பாங்காக்,சிங்கப்பூர் என் தென் கிழக்காசிய நாடுகளில் நடத்திய உலகம் சுற்றும் வாலிபன் பற்றிய தமது படபிடிப்பு அனுபவங்களை ‘திரை கடலோடித் திரைப்படம் எடுத்தோம்’ என்னும் தலைப்பில் பொம்மை இதழில் 1971-1972 வரையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தொடராக எழுத ,அது வாசகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது.அவரின் அனுபவங்கள் இன்றைய வாசகர்களுக்கு மட்டுமல்ல பட உலகினருக்கும் பயனுள்ளதாகவும் அடுத்து வரும் தலைமுறையினருக்கு முன்னோடியாகவும் இருக்கும் இந்த நூல்.
No product review yet. Be the first to review this product.