அரசியலிலும் சரி சினிமா துறையிலும் சரி தமிழக வரலாற்றிலிருந்து ஒரு நபரை மறக்கவோ மறைக்கவோ முடியாது. மக்களால் புரட்சித்தலைவர் என்று அழைக்கப்பட்ட அந்த தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன்.
தன்னிடம் வந்து உதவி கேட்டவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் வழங்கியது; சினிமா துறையில் சிறுசிறு வேடங்கள் ஏற்று நடித்து பின் ஹீரோவானது; தமிழக அரசியலில் பிரவேசித்து,பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்தது; மக்களின் மனங்களில் இடம் பிடித்து பதிமூன்று ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்தது; ரசிகர்களிடமும் தொண்டர்களிடமும் அவர் காட்டிய பரிவு என எம்.ஜி.ஆரின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களை, அவருக்கு மெய்க்காப்பாளராக முப்பது ஆண்டுகள் இருந்து பெற்ற அனுபவங்களை சரித்திரக் கதை சொல்வது போல கே.பி.ராமகிருஷ்ணன் இந்நூலில் சொல்லியிருக்கிறார்.
இந்த நூல், எம்.ஜீ.ஆரின் பல்லாயிரம் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் உற்சாகம் தருவதோடு, எம்.ஜி.ஆர்.வாழ்ந்த காலகட்ட சினிமா துறையையும், அரசியல் நிலவரத்தையும் அறிய உதவும் ஆவணப் பெட்டகமாகவும் விளங்குகிறது.
No product review yet. Be the first to review this product.