Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நாதஸ்வரம்

Author
Jd-Jerry
Weight
145.00 Gms
தமிழரின்  அரும்பெரும்  கலைகள்  அருகிக்  குறுகி  வரும்  இவ்வேளையில் கும்பகோணம்  பொம்மலாட்டத்தையும்  சிக்கல் நாயக்கன்  பேட்டை  கலங்காரி ஓவியத்தையும்  சுவாமி மலை  விக்கிரக  வார்ப்புகளையும்  ஆவணப்படுத்திய ஜேடி  ஜெர்ரி  நண்பர்கள், அவ்வரிசையில்  செய்த  மற்றுமொரு  முக்கியமான ஆவணப்படம்  'நாதஸ்வரம்'. அந்த  நாதஸ்வர  ஆவணப்படத்தின்  திரைவடிவம் இப்போது  முதன் முதலாகப்  புத்தகமாக  வந்துள்ளது.

கலைத்திறனாளர்   தேனுகாவும்  ஆவணப்பட  இயக்குநர்  பேராசிரியர் சொர்ணவேலும்  இப்புத்தகத்துக்கு  எழுதியுள்ள கட்டுரைகளும் ஆவணங்களாகவே  மாறியுள்ளன. இயக்குநர்கள்  ஜே-டியும்  ஜெர்ரியும் ஆணிவேரின்  ஈரவாசனையை  என்றும்  மறக்காதவர்கள்.  கலையின்  உள்ளடுக்கிலும்  அவர்கள்  இயங்கிக்  கொண்டிருப்பதற்கான  சாட்சி ,இப்புத்தகம்.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.