இன்று திரையுலகில் ஓர் இயக்குநராகவோ நடிகராகவோ வரமேண்டுமெனில் அதற்காக வருடக்கணக்கில் உழைக்க வேண்டியதில்லை. பட்டினியுடன் படுக்க வேண்டியதில்லை, வலியும் வேதனையும் நிறைந்த வாழ்க்கைச் சூழலை சந்திக்க வேண்டிய அவசியமில்லை. பத்து நிமிட குறும்படத்தில் திறமையை காட்டினால் போதும். வாசல் திறக்கும். ஆனால், 20 வருடக்களுக்கு முன் அப்படியில்லை. திரையுலகில் நுழைவதே பெரிய சாதனையாக கொண்டாடப்பட்டது. அப்படியொரு சாதனையைத்தான் ஜஸ்ட் லைக் தட் ஆக நிகழ்த்தியிருக்கிறார் மனோபாலா. இன்று காமெடி நடிகராக, தயாரிப்பாளராக அறியப்படும் மனோபாலா, உண்மையில் மிகச்சிறந்த இயக்குநர். ரஜினிகாந்த், விஜயகாந்த், மோகன் என அன்றைய முன்னணிக் கதாநாயகர்களை எல்லாம் இயக்கியவர். நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களை டைரக்ட் செய்தவர். இந்தித் திரையுலகிலும் இயக்குநராக வெற்றிக்கொடி நாட்டியவர். இந்தச் சாதனைகளை எல்லாம் மனோபாலா எப்படி நிகழ்த்தினார்? அதைத்தான் இந்த ‘நான் உங்கள் ரசிகன்’ நூல் விளக்குகிறது. ‘குங்குமம்’ வார இதழில் வெளிவந்த இந்த சூப்பர் ஹிட் தொடர், திரையுலகில் கால்பதிக்க முற்படும்/பாடுபடும் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் ஒரு நல்ல பாடமாக விளங்கும். சரளமான எழுத்து நடையும், இழையோடும் நகைச்சுவையும் இந்நூலின் பலம்.
No product review yet. Be the first to review this product.