நான் சுவாசிக்கும் சிவாஜி
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நான் சுவாசிக்கும் சிவாஜி

Author
Y.G.Mahendra
Weight
200.00 Gms
நடிகர் திலகம் மறைந்த பின்னும்கூட, ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்த நாளன்று அன்னை இல்லத்துக்குச் சென்று அவருடைய படத்திற்கு அஞ்சலி செலுத்துவது என் வழக்கம். அப்படி ஒரு பிறந்த நாளன்று அன்னை இல்லம் சென்றிருந்தேன். அதற்கு முந்தைய நாள்தான், அதாவது செப்டம்பர் 30 அன்று சிவாஜி பிறந்த நாள் நிகழ்ச்சியை வழக்கம்போல நடத்திருந்தோம். மறுநாள் காலை கமலா அம்மாவைப் பார்த்தோம். அப்போது கமலாம்மா என்னிடம், "நேற்று நீ என்ன செய்தாய்? இவர்கள் எல்லோரும் உன் நிகழ்ச்சிக்கு வந்துவிட்டுக் கண்ணீருடன் உணர்ச்சிமயமாக வந்தார்கள்" என்றார். பேசிக் கொண்டிருந்த கமலாம்மாவின் குரல் திடீரென மாறியது. உணர்ச்சிவசப் பட்டவராய் "மகேந்திரா, நீ என் வயிற்றில்தான் பிறந்திருக்க வேண்டும். 'பார் மகளே பார் ' படத்தில் வருவதுபோல் உன் தாயார் என்னிடமிருந்து உன்னைப் பறித்துக் கொண்டு போயிருக்க வேண்டும்" எனத் தழுதழுத்த குரலில் கூறினார். திடீரென அவர் இப்படிச்சொன்னதும், என் மகள் மதுவந்தி,மற்றும் சிவாஜி குடும்பத்தினர் அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். கமலாம்மாவின் கருத்தை அனைவரும் ஆமோதித்தனர். எப்போதும் ஓயாமல் பேசிக் கொண்டிருக்கும் நான் அன்று மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். தொண்டை அடைக்க, நா தழுதழுக்க, கண்ணீர் மல்க, வார்த்தை வராமல், பேசமுடியாமல் விக்கித்து வாயடைத்துச்சிலையாய் நின்றேன். எனக்குள்ளே இனம்புரியாத உணர்ச்சி ஊடுருவியது. எப்பேர்ப்பட்ட பேறு. இதற்கு நான் என்னதவம் செய்திருக்க வேண்டும். கண்ணீர் வற்றவில்லை. அப்படியே என் தாயாரிடம் ஓடினேன்.நடந்ததைக் கூறினேன். அவர் மனம் நெகிழ்ந்து "ஆமாண்டா மகேந்திரா, உனக்கும் சிவாஜி கமலம்மாவுக்கும் நிச்சயமாக ஏதோ பூர்வ ஜென்மபந்தம் இருக்கிறது. அதனால்தான் இந்த ஜென்மத்தில் சிவாஜிமேல் இந்த அளவுக்கு நீ உயிரை வைத்திருக்கிறாய்" என்றார்கள். "ஆம் நான் இருக்கும்வரை எனக்குள் சிவாஜி இருப்பார். அவர் பெயர் இருக்கும்வரை என் பெயரும் இருக்கும்."
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.