இப்போதெல்லாம் சினிமாவை இயக்குவது என்றால், இயக்குநரே கதையை உருவாக்கி திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதுகிற பழக்கத்தைக் கொண்டு வந்து விட்டனர்.
நல்ல கதைகளை நாவல்களிலோ அல்லது புத்தகங்களிலோ தேடும் காலம் மலையேறிவிட்டது. அந்தக் காலங்களில் நல்ல கதைகளைத் தேடினார்கள். இயக்குநரே கதை எழுத வேண்டும் என்று கருதமாட்டார். நல்ல கதைகள் நாடகங்களாக வந்து கொண்டிருந்தன. அந்த நாடகங்களைப் பார்த்து, இதைப் படமாக எடுக்கலாம் எனத் தீர்மானித்து, நாடகங்கள் சினிமாக்களாக உருவாகி, பெரிய வெற்றிகளைத் தந்தது. அந்தப் படங்களில் வெறும் பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே மையமாகக் கொள்ளாமல் சமுதாயச் சிந்தனை மேலோங்கி இருந்தன.
நல்ல நகைச்சுவை, நல்ல கருத்துகள், நீதி, நேர்மை, ஒழுக்கம் இது போன்ற வாழ்க்கை நெறிகளை சினிமா தந்தது.
ஒரு சிலரது படங்களையும் அவர்களது திரைக்கதை அமைப்புகளையும் திரைத்துறைக்கு வருகிற இளைஞர்களுக்கு தெரிந்து கொள்ள இப்புத்தகம் உதவியாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை.
No product review yet. Be the first to review this product.