ஒரு நல்ல திரைப்படம், முடிந்தவுடன் துவங்குகிறது. விதவிதமான படிமங்களாலும் எண்ணங்களாலும் அடுக்கடுக்காக மலர்ந்து நவில் தொறும் புதுப்புது வெளிகளைத் திறந்துகொண்டே இருக்கிறது. ஒரு திரைப்படம் கண்முன் நிகழ்கிற ஒரு காட்சியாக இல்லாமல் கனவாக மாறுகிறது. நீர்ப்பரப்பில் விழும் கூழாங்கல் நனைந்து அமிழ்வதைப் போலத் திரைச்சட்டகத்தின் உள்ளே நாம் அறியாமல் அமிழ்கிறோம். திரைப்படம் நம்மைச்சுற்றி, நாம் இருக்கிற, சமயங்களில் நாம் இல்லாத ஒரு கனவாக நிகழ்கிறது. ஒரு பார்வையாளராக உணர்வு ரீதியாக நாம் அடைகிற அந்த அனுபவம் தன்னிச்சையாக நிகழ்வதில்லை.
No product review yet. Be the first to review this product.