Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சத்யஜித் ரே

(0)
Price: 160.00

Author
வீ.பா.கணேஷன்
Weight
300.00 gms
இந்திய சினிமாவின் பிதாமகன் பால்கே என்றாலும் கூட, சத்யஜித் ரே-யின் அழகியல், வங்க மக்களின் அரசியல், பொருளாதார வாழ்க்கை மற்றும் அவர்களின் இலக்கியத்தின் மூலம் இந்திய சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியதை யாராலும் எளிதில் மறுக்க முடியாது. உலகம் முழுதும் உள்ள சினிமா ஆர்வலர்கள் இந்திய சினிமாவை அலசி ஆராயும்போது, அவர்களால் சத்யஜித் ரே-யை தவிர்த்துவிட்டு இந்திய சினிமாவை ஆராய முடியாது. 

 புகழ்பெற்ற வங்க எழுத்தாளர் விபூதி பூஷணின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதே இவரது முதல் படம் பாதேர் பாஞ்சாலி. இந்தப் படம் உலகம் முழுவதும் பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பரிசுகளை வென்றது.

பாதேர் பாஞ்சாலி படத்தை தொடங்கியது முதலே அவருக்கு படத்தை முடிக்க முடியாமல் பெரும் பண நெருக்கடி. எல்லா இடங்களிலும் கடன் வாங்கியும் படம் முடியவில்லை. இறுதியில் மேற்கு வங்க அரசுதான் அவரது உதவிக்கு வந்தது. முதன் முறையாக ஒரு மாநில அரசு திரைப்படத் தயாரிப்பாளராக ஆனது. அந்த உதவிக்குக் காரணம் ‘பாதேர் பாஞ்சாலி' என்ற பெயர்தான். பாதேர் பாஞ்சாலி (Song of the road) என்றால் சாலையின் இசை! 

ரே தனது வாழ்க்கையில் குறைந்த அளவே படங்களை இயக்கினாலும் இன்றளவும் அவரது புகழ் உலகம் முழுதும் நிறைந்திருக்கிறது. இதற்கு சாட்சி இவரைத் தேடி ஆஸ்கர் விருது கல்கத்தாவுக்கே வந்தது. 
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.