சோபியான் நகரத்தில் இருக்கவே எனக்கு பிடிக்கவில்லை. வேண்டுமளவு ஆப்பிள்களைச் சாப்பிடுபவர்கள், ஆப்பிள் பறிக்கும் பிஞ்சுகளையும் சேர்த்தே சாப்பிடுகிறார்கள். அவர்கள் வெறிக்கு ஏற்றபடி ஆப்பிள்கள் சிதைக்கப்படுகிறது. இப்படி சிதைப்பதும் கொல்வதும் தொடர்கதைப் போல இங்கு நிற்பதில்லை. அதிகாரிகளின் லாடம் அடிக்கப்பட்ட பூட்ஸ் கால்களின் கீழும், கோரப்பசி உடையவர்களின் வலுத்த கால்களுக்கு இடையேயும் சிதைக்கப்படும் அழகிய ஆப்பிள்கள் அதிகம். அதில் சின்ன ஆப்பிள்களும் உண்டு. மூன்று மாதத்திற்கு முன்பு தான் தனது ஆப்பிள் தோட்டத்திற்குச் சென்ற இரண்டு இளம் பெண்களைச் சிதைத்துக் கொன்றிருந்தார்கள்.
No product review yet. Be the first to review this product.