2017 - உயிர்மை பதிப்பகம் - சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கும், சுஜாதா விருது பெற்ற நூல். 1998 கோவைக்கலவரம் குறித்த உண்மைகள் வெளிவரத்துவங்கியுள்ளன. படைப்பிலக்கியங்களில் அத்துயர்மிகு நாட்கள் எழுதப்படும்போது அது செய்தியாகவோ தகவலாகவோ அல்லாமல் நம் ரத்த சொந்தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமையாக அன்றைய அதே உக்கிரத்துடன் நம்மை வந்து தாக்குகின்றது. இக்கதைகள் ஒவ்வொன்றும் சில காட்சிகளை நம் மனங்களில் அழுத்தமாக வரைந்துவிட்டன. துயரத்தில் தூரிகை தொட்டு வரைந்த அந்த ஓவியங்கள் அழியாத கோலங்களாக வாசக மனத்திரையில் நிலைபெற்றுவிட்டன. நீண்ட காலத்துக்குப் பிறகு மனதை உலுக்கிய தொகுப்பு. - ச. தமிழ்ச்செல்வன்
No product review yet. Be the first to review this product.