தமிழ் சினிமா :சில பார்வைகளும் சில பதிவுகளும் என்ற இப்புத்தகத்தில் நாற்பது திரைப்படங்களைப் பற்றிய கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பார்வைகளும் பதிவுகளும் என்பது ஒரு மனிதனுக்கு சினிமா சம்பந்தமானதாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில்லை.சினிமாவுக்கு மட்டுமென்று தனிப்பார்வை ஒரு மனிதனுக்கு வந்துவிடாது.மனித குலத்தையும் உலகத்தையும் அதன் சார்பு நிலைகளையும் ஒரு மனிதன் எந்த அளவுகோல் கொண்டு அளக்கிறனோ அதுவே அவன் எழுத்திலும் வந்து நிற்கும் மண்ணை அளப்பதை விண்ணை அளப்பதைப் போன்று கலாச்சார விஷயங்களை அளந்து வரையறுத்தல் இலகுவான காரியம் கிடையாது ஒன்றைப் பற்றிப் பேசுவதென்றாலும் ,எழுதுவதென்றாலும் இலகுவான இயல்பு தன்மையில் அமைந்தால்தான் அதன் உள்ளடக்கம் ஜீவன் பெறும்.அந்த ஜீவன் இப்புத்தகத்தில் இருக்கிறது.
No product review yet. Be the first to review this product.