Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

தமிழ் சினிமாவில் பெண்கள்

(0)
Price: 110.00

Author
Author
K.Barathi
Weight
217.00 gms
''சினிமாவில் பெண்களின் சித்தரிப்பு என்றாலே எவரும் முதலில் சொல்லக்கூடிய கருத்து 'சினிமா பெண்களை ஆபாசமாகச் சித்தா¢க்கிறது' என்பதாகத்தான் இருக்கும். இந்த ஒரு கோணத்தை முழுமையாகத் தவிர்த்துவிட்டு, கதையாடலில் பெண்கள் எவ்விதமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்  என்பதே  இந்த நூலில் மையப்படுத்தப்பட்டுள்ளது.

ஆபாசம் என்பது நபருக்கு நபர், காலத்திற்குக் காலம் மாறுபடுகின்ற ஒரு கண்ணோட்டம் . பெண்களை இழிவுபடுத்தும்  'இரட்டை அர்த்த' வசனங்களும், ஆபாசப் சித்தரிப்புகளும் மிகவும் ஆதித்தன்மை வாய்ந்தது. தமிழ் சினிமா தொடங்கிய போதே அதனுள் ஊடாடிவிட்ட வர்த்தகக் கூறுகளைத் தவிர்த்து விட்டு அதன் கதையாடல் முன்வைக்கும் கருத்தாக்கத்தை விவாதிப்பதே எனது நோக்கமாயிற்று.

தமிழ் சினிமாவுக்கும் அரசியல் இயக்கங்களுக்குமான தொடர் இந்த ஊடகத்தின் வரலாற்றுத் தன்மைக்கு மேலும் வலிமை சேர்த்திருக்கிறது. சினிமாவை அதன் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சாரப் பின்னணிகளை விலக்கிவிட்டு அணுக முடியாது. 1931 முதல் 2013 வரையிலான தமிழ் சினிமாவின் போக்குகளை அதன் பெண் கதாபாத்திரங்களுடைய சித்தரிப்பின் வாயிலாக மட்டுமே அணுகியிருக்கிறேன்.

ஆணுக்கும் பெண்ணுக்குமான ஏற்றத்தாழ்வு குறித்த சமூகப் பிரக்ஞையை ஏற்படுத்துவதற்கான ஒரு சிறிய முயற்சியே  இந்நூல்.''

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.