மேற்கத்திய அறிவியல் ஊடகமாக அறியப்படும் சினிமா வைதீக, சனாதன, சாதிய சமூகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அக்கூறுகளையே உள்வாங்கிக் கொண்டது. இப்போக்கிற்கு எதிராக அணிதிரண்ட திராவிட இயக்கத்தின் சினிமா பற்றிய பார்வை, சினிமாவை அவ்வியக்கம் அணுகிய அணுகுமுறை, அவ்வூடகத்தின் மூலம் கருத்துப் பரப்புரைகளை மேற்கொண்ட முறை, திராவிட இயக்கத் திரைப்படங்கள் ஏற்படுத்திய சமூக, பண்பாடு, அரசியல் மாற்றங்கள், தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு திராவிட இயக்கம் ஆற்றிய பங்கு முதலானவை தொடர்பாக திராவிட இயக்கத் திரைப்படப் படைப்பாளிகளின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பே இந்நூல். வைதீக, சனாதன, சாதிய சமூகத்தின் அனைத்து ஆதிக்கத்திற்கும் எதிராகத் தீரமுடன் போர்க்குரல் எழுப்பியபோது "கூத்தாடிகள்" எனக் கொச்சைப்படுத்தப்பட்ட திராவிட இயக்கத்தின் காட்சி ஊடக ஆவணம்.
No product review yet. Be the first to review this product.