ஹாலிவுட்டில் வெற்றிகரமான திரைக்கதை எழுத்தாளராக விளங்கிய ப்ளேக் ஸ்னெய்டரால் எழுதப்பட்ட திரைக்கதைப் புத்தகம் 'Save the Cat'. திரைக்கதை எழுதும் கலையைப் பற்றி மிக எளிய முறையில்சொல்லிக்கொடுத்த புத்தகம் இது. பிற திரைக்கதைப் புத்தகம் எழுதியவர்கள் போல இல்லாமல், ப்ளேக் ஸ்னெய்டர் திரைக்கதை எழுதும் கலையிலும் வல்லவராக இருந்து சாதித்துக் காட்டியதால் இந்தப் புத்தகம்இன்னும் நம்பகமானது. மிக எளிய மொழியில், ஒரு நண்பனைப் போல் சொல்லிக்கொடுத்துத் திரைக்கதை எழுத வைக்கும் புத்தகம் இது.
இந்தப் புத்தகம் தமிழுக்கு ஏற்றபடி பல தமிழ் உதாரணங்களோடு 'திரைக்கதை என்னும் பூனை' என்று எழுதப்பட்டிருக்கிறது. இது வரிக்கு வரி நேரடி மொழிபெயர்ப்பு அல்ல. மாறாக, தமிழில் திரைக்கதை எழுதவிரும்பும் ஒருவருக்கு அந்தப் புத்தகத்தை எப்படி வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டது.
test
Posted by anupriya duraisamy on Jul 20, 2019