ஒளிப்பதிவுத் தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களை படிப்பவர்களுக்கு எளிதில் புரியும் தொழில்முறை பதங்கள் (technical terminology) மற்றும் உரிய படங்களுடன் வெளிவந்திருக்கிறது இந்நூல். ஒளி ஓவியம் புத்தகத்தின் இரண்டாவது பாகமான திசை ஒளி-யில் ஒளிப்பதிவுக் கலையின் அதி நுணுக்கங்களையும், பலதரப்பட்ட திரைப்படங்களுக்கு (different genres of films) கதைக்கு மெருகூட்டும் வகையில் கதையின் போக்குடனும்,கலை நயத்துடனும் எவ்வாறு ஒளிப்பதிவு செய்வது என்பதையும்,பல்வேறு ஒளிவிளக்குகளின் தன்மைகளையும் (குறிப்பாக இன்று வெகுவாக பிரபலமாகிக் கொண்டிருக்கும் லிணிஞி விளக்குகளின் சிறப்பம்சங்களையும்) பற்றி விரிவாகவும் முன்யோசனையுடனும் எழுதப்பட்டுள்ளது.
தவிர,எந்த தொழில்கூடத்திலும் இயங்குவதற்கு முன் அங்கு எந்தவிதமான அசம்பாவிதமும் ஆபத்தும் நேர்ந்துவிடாமல் தடுக்கவும், தொடங்கிய வேலையை (Process) திட்டமிட்டபடி வெற்றிகரமாக எந்தவித நிகழ்வும் இல்லாமல் (incident free) நடத்தி முடிக்கவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் (safety first) மிகவும் முக்கியம்.அதனை மனதில் கொண்டு, மின்சாரத்தின் தன்மையைப் பற்றியும்,மின்சார இணைப்புகளை பாதுகாப்பாக கையாளுவது பற்றியும் முதல் அத்தியாயத்திலேயே சொல்லப்பட்டிருப்பது இப்புத்தகத்தின் பாராட்டுதலுக்குரிய சிறப்பம்சம்.
S.சிவராமன்
No product review yet. Be the first to review this product.