திரைக்கதை எழுதிப் பயிற்சி பெற எளிய வழி ஏற்கெனவே வெளிவந்த திரைப்படத்தில் சில மாறுதல்களைச் செய்து எழுதிப் பார்ப்பதுதான். ”மூணு” படத்தில் நாயகனுக்கு மன நோய் இருக்கும்.அதுவே நாயகிக்கு இருந்தால் ..? “காதல்” படத்தில் நாயகனுக்கு மனநிலை கலங்கிவிடும் .நாயகியும் அவளுடைய புதிய கணவனும் அவனைத் தங்கள் பராமரிப்பில் பார்த்துக்கொள்வார்கள். நாயகனுக்கு நினைவு திரும்பிவிட்டால்..? ”முதல்வன்” படத்தில் அர்ஜூனுக்கு தீடீர் முதல்வராகும் வாய்ப்பு கிடைத்ததுபோல் வடிவேலுக்குக் கிடைத்தால் ..? ”நண்பன்” படத்தில் விஜய் புத்திசாலி மாணவராக இருப்பார் .அவர் ஆசிரியரானால் .அந்த வேடத்தை ஜோதிகா/ஸ்ரீதேவி நடித்தால்..?-இப்படியாக பார்த்த திரைப்படங்களின் இருந்து பார்க்கபோகின்ற திரைப்படங்களை இந்தப் புத்தகத்தில் உருவாக்கியிருக்கிறார் ஆசிரியர்.தேர்ந்த சிற்பிக்கு வெறும் கல்லைப் பார்த்தாலே அதில் மறைந்திருக்கும் சிலையைக் கண்டுபிடித்திட முடியும் .இந்தப் புத்தகமோ கல்லில் சிலையை வரைந்தே காட்டியிருக்கிறது.செதுக்க வேண்டியது மட்டுமே பாக்கி.நான் ரெடி ..நாளைய இயக்குனர்களே நீங்க ரெடியா?
No product review yet. Be the first to review this product.