தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல் என்று ஏட்டளவில் மட்டும் சொல்லிக்கொடுக்கும் நம் கல்வி முறை சாதி ஒழிப்பு குறித்து என்றேனும் பேசியிருக்கிறதா? கல்விமுறை மட்டுமல்ல. நம் வீடுகளும் குடும்பங்களும் சாதி மாற்று மத மறுப்புத் திருமணங்களை ஏற்றுக் கொள்ளுமானால், சிறு வயதிலேயே சாதி என்பது உயிர்க் கொல்லி என்கிற கருத்தை பிஞ்சு மனங்களில் ஏற்றினால், இனிவரும் தலைமுறையிலாவது சாதி குறித்த வெட்டிப் பெருமிதங்களும், அதன் காரணமாக நிகழும் கௌரவக் கொலைகளும் ஓரளவுக்கேனும் குறையும் என்று நம்பலாம்.

× The product has been added to your shopping cart.