இந்த நூலின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் பெரியாரிய அம்பேத்கரிய சிந்தனைகளின் வழிப்பட்ட பார்வை புலனான படியே இருக்கிறது.
தமிழ் சினிமாவின் ஆதிநாள் துவங்கி நேற்று வரையான திரைப்படங்களில் நடிகர்கள் மற்றும் அவர்களது அரசியல் பிரவேசம். சாதி, சாதியம் இயங்கும் முறை இவற்றை மிகத் தீவிரமாக ஆய்வு செய்திருக்கும் கட்டுரைகள், பல தளங்களில் பயணிக்கும் நனவோடைப் பதிவுகள். இவரது பதிவுகளில் திரைப்படங்களை ஆர்வமாகப் பார்த்த சிறுவனது அனுபவம் துவங்கி, ரசிகனாகப் பரிணமித்த இளைஞன் ஊடாக, தீவிரமாக அவற்றைப் பரிசீலனை செய்யும் ஆய்வாளரையும், வரலாற்றாசிரியரையும் எதிர்கொள்கிறோம்.
திரைப்படங்களின் உருவாக்கத்திலுள்ள கூட்டு முயற்சியைத் தமதாக்கி, தங்களை முன்னிருத்தி 'அதிநாயகர்கள்' ஆனது போன்றே அரசியலிலும் முயல்கிறார்கள். அவர்கள் கோள்களை அடிப்படையிலான அரசியல் இயக்கங்களை உருவாக்குவதில்லை. மாறாக திரையில் கட்டமைத்த பிம்பங்களின் பலத்தை நம்பி தேர்தலில் இறங்கி முதல்வர் பதவியை எளிதாக வென்றுவிட முயல்கிறார்கள் என்கிற குமரன்தாஸ் அவர்களின் பார்வை கூர்மையானது.
சுப குணராஜன்
No product review yet. Be the first to review this product.