ஒரு ஹிந்தி நடிகரைப் பற்றி தமிழில் வந்திருக்கும் முதல் புத்தகம். இதில் தர்மேந்திராவைப் பற்றி மட்டுமின்றி, அவர் உடன் பணியாற்றிய கதாநாயகிகள் இயக்குநர்கள், பாடல் ஆசிரியர்கள், இசையமைப் பாளர்கள், பாடகர்கள் என்று பல்வேறு ஆளுமைகளைப் பற்றிய அரிய தகவல்களுடன் இந்தப் புத்தகம் ஆவணமாகத் திகழ்கிறது. மொழிகளைத் தாண்டி நல்ல சினிமாவை ரசிப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு பொக்கிஷம்.
சிறுகதைகள், கவிதைகள், சமூக- அரசியல் கட்டுரைகள், சினிமா விமர்சனங்கள் எனத் தமிழின் அனைத்து முன்னணி இதழ்களிலும் 2000-க்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்த அப்சலின் 40 வருடக் காதலும், 4 மாத உழைப்பும்தான் இந்தப் புத்தகம்!
No product review yet. Be the first to review this product.